உங்களுக்கு தோனி கிடைச்ச மாதிரி, எங்களுக்கு இவரு கிடைச்சிட்டாரு - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பேட்டி! 1

இந்தியாவிற்கு தோனி செய்ததை போல, இங்கிலாந்துக்கு பட்லர் செய்வார் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பேட்டியளித்துள்ளார்.

டி20 உலக கோப்பை தொடரில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பை தொடரை பெற்றுத் தந்தது.

இங்கிலாந்து

டி20 போட்டிகளுக்கு ஜோஸ் பட்லர் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு இங்கிலாந்து அணியின் அணுகுமுறை முற்றிலுமாக மாறுபட்டு இருக்கிறது. அதிக தாக்கம் ஏற்படுத்தக்கூடிய அணியாகவும் இருப்பதாக தெரிகிறது.

பட்லரின் கோப்பை வேட்டை இத்துடன் நிற்கப்போவதில்லை. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையிலும் நீடிக்கும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜோஸ் பட்லர்

இந்நிலையில் தோனி இந்தியாவில் எப்படி தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினாரோ! அதேபோல ஜோஸ் பட்லர் இங்கிலாந்தில் செய்வார் என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.

ஜோஸ் பட்லருக்கு இப்போது 32 வயது மட்டுமே ஆகிறது. தனது முதல் உலகக் கோப்பையை வென்றிருக்கிறார். இந்தியாவில் தோனி பல ஆண்டுகளாக தனக்கென்று தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியது போல ஜோஸ் பட்லரால் இங்கிலாந்தில் செய்ய முடியும். குறிப்பாக லிமிடெட் ஓவர் போட்டிகளில் மட்டும் அவர் கவனம் செலுத்தினால், இது சாத்தியப்படும்.

அணியில் சரியான வீரர்களை, குறிப்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளர், ஸ்விங் மற்றும் வேகத்தில் திறமையானவர், ஆப்-ஸ்பின், லெக்-ஸ்பின் இரண்டையும் வீசக்கூடிய ஒரே வீரர், முழுமையான சுழல் பந்துவீச்சாளர் என சரியான கலவையான அணியை உலக கோப்பைக்கு தேர்வு செய்து எடுத்துச் சென்றிருக்கிறார்.

ஜோஸ் பட்லர்

அவருக்கு தொலைநோக்கு பார்வை இருக்கிறது. நிச்சயம் இன்னும் சில ஆண்டுகள் இங்கிலாந்து கேப்டன் ஆக இருப்பார். அவருக்கு என்று சாம்ராஜ்யம் உருவாகும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.” என கூறினார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *