என்னமா விளையாடுறான்… சும்ம்மா சொல்ல கூடாது அந்த பையன் வேற லெவல்; இந்திய வீரரை பாராட்டி பேசிய ஜாஸ் பட்லர் !! 1

இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்து வரும் இளம் வீரர் ரிஷப் பண்ட்டை, இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜாஸ் பட்லர் புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கடந்த மாதம் 9ம் தேதி துவங்கியது.

மொத்தம் 60 போட்டிகள் இந்த தொடரில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றிருந்த நிலையில், கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகள் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

என்னமா விளையாடுறான்… சும்ம்மா சொல்ல கூடாது அந்த பையன் வேற லெவல்; இந்திய வீரரை பாராட்டி பேசிய ஜாஸ் பட்லர் !! 2

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு சில வீரர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடிய இளம் வீரர்கள் சிலர் இந்த தொடர் குறித்தான தங்களது அனுபவங்களை பகிர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அதே போல் முன்னாள் வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் தங்களை கவர்ந்த வீரர்கள் குறித்தும், ஒவ்வொரு அணியின் செயல்பாடுகள் குறித்தும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், ஐபிஎல் தொடருக்கான தனது ஆல் டைம் சிறந்த ஆடும் லெவனை சமீபத்தில் தேர்வு செய்து அறிவித்திருந்த இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர், தற்போது டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட்டை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

என்னமா விளையாடுறான்… சும்ம்மா சொல்ல கூடாது அந்த பையன் வேற லெவல்; இந்திய வீரரை பாராட்டி பேசிய ஜாஸ் பட்லர் !! 3

ரிஷப் பண்ட் குறித்து ஜாஸ் பட்லர் பேசுகையில், ““எதிரணியில் ரிஷப் பந்த் போன்றவர் இருந்தால், நிச்சயம் அழுத்தம் அதிகரிக்கும். இவர் இல்லாத அணியுடன் விளையாடத்தான் விரும்புவேன். அபாயகரமான பேட்ஸ்மேன். சமீப காலமாக இவரின் ஆட்டத்தில் அனல் பறந்து வருகிறது. எப்பேர்ப்பட்ட பௌலரையும் பயம் இல்லாமல் எதிர்கொள்ளக் கூடியவர். எதிர்காலத்தில் தலை சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்வார்” என்றார்.

என்னமா விளையாடுறான்… சும்ம்மா சொல்ல கூடாது அந்த பையன் வேற லெவல்; இந்திய வீரரை பாராட்டி பேசிய ஜாஸ் பட்லர் !! 4

சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் அதில் 6 போட்டியில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *