புதிய டி20 அணிக்கு ஆடப்போகும் ஜேபி டுமினி! அப்போ மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கல்தாவா? 1

கடந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணிக்காக ஆடிய ஜேபி.டுமினி தற்போது வங்கதேச பிரீமியர் லீக் தொடரின் ராஜஷி கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் ஆகியுள்ளார்

2019 உலகக் கோப்பையோடு ஒருநாள் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க வீரர்கள் இம்ரான் தாஹிர், ஜேபி.டுமினி அறிவித்தனர்.

40 வயது சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர், ஆல் ரவுண்டர் டுமினி ஆகியோர் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளனர். 107 ஆட்டங்களில் 173 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள தாஹிரின் சிறந்த பந்துவீச்சு 7-45 ஆகும்.

புதிய டி20 அணிக்கு ஆடப்போகும் ஜேபி டுமினி! அப்போ மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கல்தாவா? 2
“I strongly believe there is lots of talent but they just need experience and then they’ll get to the stage where everyone wants to see South African cricket.

அதே நேரத்தில் டுமினி 199 ஒருநாள் ஆட்டங்களில் 5117 ரன்களை விளாசியுள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 84.58 ஆகும். மேலும் 69 விக்கெட்டுகளையும் வீழ்த்திய அவரது சிறந்த பந்துவீச்சு 4-16 ஆகும்.

ஒருநாள் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். மிகவும் வேதனை தருகிறது. சர்வதேச ஆட்டங்களில் ஆடுவது என்பது எனது கனவு.

அதை நனவாக்கிய அணி நிர்வாகம், சக வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தென்னாப்பிரிக்க அணிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அதிக இளம் வீரர்கள் உருவாகி உள்ளனர் எனத் தெரிவித்தனர்.புதிய டி20 அணிக்கு ஆடப்போகும் ஜேபி டுமினி! அப்போ மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கல்தாவா? 3

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிவரும் ஜேபி.டுமினிக்கு 35 வயதாகிறது. சென்ற வருடம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய அவர் ஒரு அளவிற்கு மட்டுமே ஆடினார். இந்நிலையில் தற்போது வங்கதேச பிரீமியர் லீக் தொடரின் ராஜஷி கிங்ஸ் அணி இவரை ஒப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த அணி ட்வீட் செய்துள்ளது…

தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர் டுமினியை ஒப்பந்தம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அற்புதமான இடது கை ஆட்டக்காரர், பட்டையைக் கிளப்பும் பீல்டர், தேவையான நேரத்தில் விக்கெட் எடுத்துக் கொடுக்கும் சுழற்பந்து வீச்சாளர், தென் ஆப்பிரிக்க அணிக்கு 14 வருடம் உழைத்தவர் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடுவார் என்று தெரிகிறது

 

 

இதற்கு முன்னதாக பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடரில் ஆடிய அவர் 251 ரன்கள் குவித்திருந்தார் மேலும்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *