தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த ஹைதராபாத்துக்கு அடிச்ச ஜாக்பாட் ! அணியில் இணையும் மிக முக்கிய வீரர் ! 1

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 14வது சீசன் ஏப்ரல் 9 முதல் கோலாகளமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 7 லீக் போட்டிகள் முடிவடைந்து இருக்கிறது. இதில் டெல்லி, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் தலா ஒரு வெற்றியும் ஆர்சிபி அணி இரண்டு வெற்றிகளையும் பெற்று இருக்கிறது.

தற்போது புள்ளி பட்டியலில் இரண்டு வெற்றிகளுடன் ஆர்சிபி அணி தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்த சீசனில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இருக்கிறது.

தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த ஹைதராபாத்துக்கு அடிச்ச ஜாக்பாட் ! அணியில் இணையும் மிக முக்கிய வீரர் ! 2

இந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வி அடைந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் அணியில் பல்வேறு முக்கிய வீரர்கள் ஒருசில காரணத்தினால் இடம்பெறவில்லை. ஹைதராபாத் அணியில் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் யாரும் கடந்த இரண்டு போட்டிகளில் இல்லை.

தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த ஹைதராபாத்துக்கு அடிச்ச ஜாக்பாட் ! அணியில் இணையும் மிக முக்கிய வீரர் ! 3

அந்த இடத்தில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் கடந்த சீசனில் சிறப்பாக விளையாடினார். ஆனால் வில்லியம்சன் பங்களாதேஷ் தொடரில் முட்டியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இன்னும் அணியில் இணையாமல் இருக்கிறார். இது அந்த அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தற்போது தனது உடல்நிலை குறித்த தகவலை வெளியிட்டு இருக்கிறார். இதை சன்ரைஸர்ஸ் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறது. கேன் வில்லியம்சன் பேசுகையில் “காயத்திலிருந்து குமணடைந்து வருகிறேன்.

தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த ஹைதராபாத்துக்கு அடிச்ச ஜாக்பாட் ! அணியில் இணையும் மிக முக்கிய வீரர் ! 4

வலியில் இருந்து தப்பிக்கு என்ன செய்ய வேண்டுமென்று தெரியும், எனது காயத்தை தொடர்ச்சியாக கவனித்து வருகிறோம். இந்த வாரத்திற்குள் முழுமையாக குணமடைந்து விடுவேன் என்று நம்புகிறேன். இப்ப சமநிலைக்கு திரும்பி இருக்கிறேன். முன்னேற்றம் அடைந்து வருவதால் விரைவில் களத்தில் விளையாட விளையாடுவேன்” என்று கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *