இந்திய அணியில் எனக்கான இடத்தை பிடிக்க போராடுவேன்; கருண் நாயர்

இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பெறுவதற்காக கடுமையாக போராடி வருவதாக இளம் வீரரான கருண் நாயர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கருண் நாயர். 26 வயதாகும் இவர் 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மொகாலி டெஸ்டில் அறிமுகமானார். மொகாலி டெஸ்டில் நான்கு ரன்களும், அதன்பின் நடைபெற்ற மும்பை டெஸ்டில் 13 ரன்களும் அடித்தார்.

சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் 3-வது டெஸ்டிலேயே முச்சதம் அடித்து அசத்தினார். அத்துடன் 303 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் சேவாக்குடன் முச்சதம் அடித்த வீரர் பட்டியலில் இடம்பிடித்தார்.

Cricket – India v England – Fifth Test cricket match – MA Chidambaram Stadium, Chennai, India – 19/12/16 – India’s Karun Nair plays a shot. REUTERS/Danish Siddiqui

அதன்பின் ஆஸ்திரேலியா தொடரின்போது பெங்களூரு டெஸ்டில் 26 ரன்களும், ராஞ்சி டெஸ்டில் 23 ரன்களும், தரம்சாலா டெஸ்டில் 5 ரன்களும் மட்டுமே எடுத்தார். இதனால் இந்திய அணியில் தொடர்ந்து இடம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கான அந்தஸ்தை பெற்ற ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, தனது டெஸ்ட் பயணத்தை இந்திய அணியுடன் இருந்து துவங்க உள்ளது. இதற்காக இந்தியா வருகிற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஜூன் 14ம் தேதி துவங்க உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் தனக்கான ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்து கொள்ள முழு முயற்சியில் ஈடுபட உள்ளதாக இளம் வீரரான கருண் நாயர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருண் நாயர் கூறுகையில் ‘‘நான் தற்போது பிட்டராகியுள்ளேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அணியில் இடம்பெறவில்லை. இந்த நேரத்தில் அதிக சிரமம் எடுத்து என்னுடைய திறமையை வளர்த்துள்ளேன்.

பேட்டிங் மற்றும் பிட்னஸில் அதிக கவனம் செலுத்தினேன். உள்ளூர் தொடர்களில் அதிக ரன்கள் குவித்துள்ளேன். இரண்டு வருடத்திற்கு முன் நான் இருந்ததை விட தற்போது நான் முன்னேற்றம் அடைந்துள்ளேன்’’ என்றார்.

ஆப்கானிஸ்தான் டெஸ்டிற்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

 1. ரகானே (கேப்டன்), 2. தவான், 3. முரளி விஜய், 4. லோகேஷ் ராகுல், 5. புஜாரா, 6. கருண் நாயர், 7. சகா (விக்கெட் கீப்பர்), 8. அஸ்வின், 9. ஜடேஜா, 10. குல்தீப் யாதவ், 11. உமேஷ் யாதவ், 12.சைனி, 13. ஹர்திக் பாண்டியா, 14. இசாந்த் சர்மா, 15. சர்துல் தாகூர். • SHARE

  விவரம் காண

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் !!

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார்....

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் இந்திய டி.20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தான் பெரிதாக கவலை...

  இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்!

  இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன்...

  தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர்

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும்...

  ரிஷப் பன்ட்டை தூக்கிவிட்டு இவரை களமிறக்குங்கள்; கவாஸ்கர் காட்டம்

  ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய...