வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் தற்போது ஐந்து ஒரு நாள் போட்டிகளும் ஒரே ஒரு டி20 போட்டிகளும் விளையாடுகிறது. இதில் இரண்டு ஒரு நாள் போட்டிகள் முடிவடைந்து உள்ளது நடந்து முடிந்த இரண்டு ஒரு நாள் போட்டிகளில் முதல் ஒரு நாள் போட்டிகள் மழை காரணமாக ஆட்டம் கைவிட பட்டது பிறகு நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர்கள் முடிவடைந்ததும் இந்திய அணி இலங்கை உடன் விளையாட உள்ளது இதில் கருண் நாயர் விளையாடவில்லை.
ஏன் என்றால் கருண் நாயர் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதும் இந்தியா ஏ பிரிவில் இருக்கிறார்.
இந்த தொடரில் கருண் நாயர் இடம் பிடித்து இருக்கிறார் இதனால் இவர் ஜூலை மாதம் இலங்கை இந்தியா அணிகள் மோதும் போட்டியில் இடம் பெற மாட்டார். கருண் நாயர் சிறிது மாதங்களுக்கு முன்னாள் படைத்த சாதனை நாம் அனைவருக்குமே நினைவில் இருக்கும்.
கருண் நாயர் படைத்த சாதனை :
இந்திய அணியில் விரேந்தர் சேவாக் தான் முதல் முதலில் டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்களை அடித்தார் அவரின் இந்த சாதனையே முதல் மற்றும் கடைசியாக இருந்தது.அதற்கு பிறகு இந்திய அணியின் இளம் வீரரான கருண் நாயர் டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்கள் அடித்து அசத்தினார்.
இந்திய அணியில் 300 ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் தற்போது கருண் நாயர் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளார்.இந்த போட்டிகளுக்கு பிறகு இவர் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை இதனால் இவரை அணியில் சேர்க்கவும் இல்லை.இதற்க்கு பிறகு நடந்த வங்கதேசம் டெஸ்ட் தொடரில் இவர் சரியாக விளையாடவில்லை அதற்கு பிறகு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் இவர் சரியாக விளையாடாத காரணத்தினால் அடுத்த அடுத்த போட்டிகளில் இவர் இந்திய அணியில் சேர்க்கவில்லை.
கருண் நாயர் சேர்க்க படாத கரணம் :
சென்ற வருடம் கருண் நாயர் சென்னை அரங்கில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.
இந்த சாதனைக்கு பிறகு கருண் நாயர் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. அதற்கு பிறகு கருண் நாயர் ஆஸ்திரேலியா அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் இந்திய விளையாடியது இந்த போட்டிகளில் கருண் நாயர் அடித்த ரன்கள் ஒரு போட்டியில் 26 ரன்களும் அடுத்த போட்டியில் 0 ரன்களும் பிறகு 23 ரன்களும் எடுத்தார்.
இதே போன்று மோசமாக கருண் நாயர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதால் அடுத்த அடுத்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கருண் நாயேற்க்கு பறிபோனது.
“நான் அப்படி நினைக்கவில்லை.அவர் எப்போதும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்படலாம் மற்றும் வேறு யாராவது அவரை மாற்றுவதற்கு பெயரிடப்படலாம்,தென்னாபிரிக்காவுக்கு எதிரான ‘A’ தொடர் இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடருடன் மோதிக் கொண்டிருப்பதாக உங்கள் கருத்து எனக்கு புரிகிறது,ஆனால் டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அவரை புறக்கணிப்பதை உணர எந்த காரணமும் இல்லை. மேலும், நாயர், ‘ஏ’ அணியுடன் பயணம் செய்தால், அவரது நம்பிக்கைக்கு நல்லது, “என்று அவர் கிரிக்கெட் நெக்ஸிடம் தெரிவித்தார்.”
இந்தியா ஏ அணியில் கருண் நாயர் :
இந்தியா ஏ அணியில் இடம் பிடித்தவர்கள் :
மந்தீப் சிங்,சுரேஷ் ஐயர்,சஞ்சு சாம்சன்,மனிஷ் பாண்டே(கேப்டன் ),தீபக் ஹூடா,கருண் நாயர்,குர்னால் பாண்டிய,ரிஷாப் பண்ட்(விக்கெட் கீப்பர் ), விஜய் ஷங்கர்,சாஹல்,ஜெயன்ட் யாதவ்,பாசில் தம்பி,முஹம்மத் சிராஜ்,அக்சார் படேல்,கவுல்,தாகூர்.
இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி :
பஞ்சால்,அபினவ் முகுந்த்,சுரேஷ் ஐயர்,அன்கிட்,கருண் நாயர்(கேப்டன்),சுதீப்,இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்),ஹனுமா விஹாரி,ஜெயந்த் யாதவ்,நவதீப் சைனி,,முஹம்மத் சிராஜ்,தாகூர்,அன்கித்,அன்கித் ராஜ்புட்.