ஆஸ்திரேலியா இந்தியா மோதும் நான்காவது ஒருநாள் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 4வது ஓவரில் பும்ரா பந்தில் ஷான் மார்ஷ் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார். தற்போது 38-2 என தருமாறி வருகிறது ஆஸ்திரேலியா.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற, மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இந்நிலையில், மொகாலியில் உள்ள ஐஎஸ் பிந்திரா மைதானத்தில் நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

மொகாலி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. ஒரு சிறந்த அணி இந்த மைதானத்தில் எளிதில் 350 ரன்கள் எட்ட முடியும். 2017ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக இந்திய அணி 392 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ரன் ஆகும். ரோகித் சர்மா இந்த மைதானத்தில் தான் 208 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த மைதானத்தில் அதிகபட்சமாக சச்சின் மொத்தம் 366 ரன்கள் குவித்துள்ளார். கேப்டன் விராட் கோலியும் கடைசியா 154 ரன்கள் ஆட்டமிழக்காமல் எடுத்து இருந்தார்.

தொடக்க வீரர்கள் வலுவான அடித்தளம் அமைத்தால்தான் ஒரு அணி 350 ரன்களை எட்ட முடியும். இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி தொடர்ச்சியாக சொதப்பி வந்தது. ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து இருவரும் ஏமாற்றி வந்தனர்.

இந்நிலையில், இன்றையப் போட்டியில் தவான், ரோகித் ஜோடி சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஷிகர் தவான் 44 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 17.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை எட்டியது.ஷான் மார்ஷ் க்ளீன் போல்டு!! இந்தியா ஆதிக்கம்!! தடுமாறும் ஆஸ்திரேலியா!! வீடியோ உள்ளே! 1

நிதானமாக விளையாடிய ரோகித் 61 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது அவரது 40வது அரைசதம் ஆகும். இந்திய அணி 22 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 130 ரன்களை எட்டியுள்ளது. ரோகித் – தவான் ஜோடி 15வது முறையாக 100 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. இது மூன்றாவது சிறப்பான ஜோடி ஆகும். இந்திய அணி 30 ஓவரில் 182 ரன் எடுத்தது. ரோகித் சர்மா 92 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 31 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது.

அதன்பிறகு, தவானுடன் ராகுல் ஜோடி சேர்ந்தார். ரோஹித் ஆட்டமிழந்த போதும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த தவான் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 16-ஆவது சதத்தை கடந்தார். சதம் அடித்த பிறகு பவுண்டரியிலே ரன் குவித்து வந்த தவான் 143 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். மொத்தம் 115 பந்துகளை எதிர்கொண்ட அவர் 18 பவுண்டரிகள், 3 சிக்ஸர் அடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் இது தவானின் அதிகபட்ச ஸ்கோராகும்.

அதன்பிறகு, கோலி 7 ரன்கள், நிதானமாக விளையாடிய ராகுல் 26 ரன்கள் என குறுகிய நேரத்தில் ஆட்டமிழந்தனர். இதனால், ரன் ரேட் சற்று குறைந்தது.

ஷான் மார்ஷ் க்ளீன் போல்டு!! இந்தியா ஆதிக்கம்!! தடுமாறும் ஆஸ்திரேலியா!! வீடியோ உள்ளே! 2
Indian cricketer Jasprit Bumrah celebrates the wicket of New Zealand cricketer Ross Taylor during the third One day international (ODI) cricket match between India and New Zealand at the Green Park Cricket Stadium in Kanpur on October 29, 2017. —-IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE—– / GETTYOUT
/ AFP / MONEY SHARMA / —-IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE—– / GETTYOUT

எனினும், ரிஷப் பந்த் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு, விஜய் சங்கர் கடைசி கட்டத்தில் அதிரடி காட்ட நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்களை குவித்தது. சங்கர் 26 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். பூம்ரா கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தினார்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளும், ரிச்சர்ட்ஸன் 3 விக்கெட்டுகளும், ஸாம்பா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதனை தொடர்ந்து ஆடிவரும் ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க முதல் சரிவு தான்.

முதலில் புவனேஸ்வர் குமார் கேப்டன் ஃபின்சை க்ளீன் போல்ட் ஆக்கினார். அதன்பிறகு பும்ரா வீசிய பந்தில் ஷான் மார்ஷ் போல்ட் ஆனார். தற்போது ஆஸ்திரேலியா அணி  12 ஓவர் முடிவில் 58 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தவித்து வருகிறது.

வீடியோ:

https://twitter.com/dhonirohitfan1/status/1104723347399630848?s=19

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *