Zaheer Khan, Cricket, BCCI, Anil Kumble, India, Bowling Coach

முன்னால் இந்திய வேக பந்து வீச்சாளர் ஜாஹீர் கான் இந்திய அணிக்காக பயிற்சியாளராக இருப்பது எனக்கு ஆசைதான் என அவருடைய ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். கடந்த ஆண்டு, தலைமை பயிற்சியாளராக அணில் கும்ப்ளேவையும், பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரை நியமித்தது. ஆனால், பந்துவீச்சுக்கு பயிற்சியாளராக யாரையும் நியமிக்க வில்லை.

இந்திய அணிக்காக பயிர்ச்சாளராக வருவது ஆசையாக இருக்கிறது என ஜாஹீர் கான் கூறினார். இவருக்கு முன்னர், இந்தியாவின் சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இந்தியாவின் பயிற்சியாளராக ஜாஹீர் கான் வரவேண்டும் என கூறினார்.

“பயிற்சியாளராக ஆக வேண்டும் என நான் பிளான் பண்ணவில்லை, ஆனால் ஆசை இருக்கிறது. என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் நான் சிறப்பாக செயல் பட்டுளேன். யாருக்காவது ஆலோசனை வேண்டும் என்றால், கண்டிப்பாக நான் வருவேன்,” என ஜாஹீர் கான் கூறியுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக சிறப்பாக செயல் பட்டுள்ளார். இளம் அணியை வைத்து சிறந்த தொடரை விளையாடினார். இதனால், பும்ரா, புவனேஸ்வர், உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகிய பந்துவீச்சாளர்களுக்கு ஜாஹீர் கான் சிறப்பாக ஆலோசனை கூறுவார் என தெரிகிறது.

“கிரிக்கெட்டின் புதிய விதிமுறைகளால், பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல் பட வேண்டும்,” என மேலும் அவர் கூறினார்.

2011 உலக கோப்பையில் இந்திய வெற்றி பெற முக்கிய வீரராய் இருந்தார். இதுவரை 92 டெஸ்ட் மற்றும் 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 311 மற்றும் 282 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *