இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே பிங்க் நிற பந்தில் நடைபெறவிருக்கும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி புதிய திட்டங்களுடன் களமிறங்கியிருக்கிறார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த பிப்ரவரி 5-ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என சமநிலையில் இருக்கின்றனர்.

பிங்க் பால் போட்டிக்கு இவர்கள் தான் சரியானவர்கள் ; விராட் கோலியின் புதிய திட்டம் ! 2

இதையடுத்து நடைபெற இருக்கும் 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி  அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான “மோதிரா” மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடக்கும் என்று கூறியுள்ளனர்.  3ஆவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி(நாளை) தொடங்க இருக்கிறது.

இந்த போட்டி பிங்க் நிற பந்தில் நடைபெற இருப்பதால் வீரர்கள் பந்தை எதிர்கொள்வதற்கு சிரமமாக இருக்கும்.  இருப்பினும் இதில் வென்று தொடரில் முன்னிலை வகிப்பதற்கு இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிங்க் பால் போட்டிக்கு இவர்கள் தான் சரியானவர்கள் ; விராட் கோலியின் புதிய திட்டம் ! 3

இந்நிலையில், இந்தப் போட்டி நடைபெறும் பிட்ச் ஸ்பின் பவுலர்களுக்கு ஏற்றவாறு இருக்கும். இதில் பவுன்சர்கள் மற்றும் சாட் பந்துகளை வீசினால்  எதிரணி பேட்ஸ்மேன்களை திணற வைக்க முடியும என்பதால் இந்திய பவுலிங்கில் மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்திய அணியில் இருந்து முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

இவர்கள் இருவருக்கும் பதிலாக உமேஷ் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா அணியில் சேர்க்க அதிகமான வாய்ப்பிருக்கிறது. காயத்தில் இருந்து மீண்டுள்ள உமேஷ் யாதவ்  பவுன்சர்கள் வீசுவதில் வல்லவர். அதேபோல் பும்ராவும் சிறப்பாக பந்துவீசி விக்கெட் வீழ்த்தி தரக்கூடியவர் என்பதால் விராட்கோலி இவர்களை அணியில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்வார் என்று பேசப்படுகிறது. 

பிங்க் பால் போட்டிக்கு இவர்கள் தான் சரியானவர்கள் ; விராட் கோலியின் புதிய திட்டம் ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *