ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறும் ரவிச்சந்திர அஸ்வின், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மாற்றப்படுவதற்கான அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதால், முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் அணிக்கு கேப்டனாக ரவிச்சந்திர அஸ்வின் நியமிக்கப்பட்டார். 2018-ம் ஆண்டில் பஞ்சாப் அணி 7-வது இடத்திலும், 2019-ம் ஆண்டில் 6-வது இடத்துக்கும் முன்னேறியது.

ஆனாலும், ரவிச்சந்திர அஸ்வின் செயல்பாடு மனநிறைவு அளிக்கும் வகையில் இல்லாததால் அவரை அணியில் இருந்து கழற்றிவிட்டுவிட்டு வேறு ஒருவரை கேப்டனாக நியமிக்க அணி நிர்வாகம் முடிவு செய்தது.2 வீரர்களை வாங்கிவிட்டு அஸ்வினை வெளியேயேற்றிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்! அடுத்த கேப்டன் யார்? 1

மேலும், அணிகளுக்கு இடையே பரஸ்பர வீரர்கள் பரிமாற்ற அடிப்படையில் அஸ்வினை மாற்றிக் கொள்ளவும் பஞ்சாப் அணி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, அஸ்வினைப் பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாக இரு வீரர்களை தர டெல்லி கேபிடல்ஸ் அணி முன்வந்துள்ளது. இதற்கான பேச்சும் நடந்து முடிந்தது.

ஆனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து அஸ்வினை வெளியேற்றுவதற்கு அணியின் செயல் இயக்குநர் அனில் கும்ப்ளே மறுத்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து அனில் கும்ப்ளேவிடம் கேட்டபோது, ” எந்தவிதமான முடிவும் இப்போதுள்ள நிலையில் எடுக்கவில்லை. ஆனால், அதற்கான பேச்சுகள் நடந்து வருகின்றன. இன்னும் அணியில் எந்தெந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்ற பட்டியல் என்னிடம் வரவில்லை. சில வீரர்களைத் தக்கவைக்கவும், சில வீரர்களை மாற்றிக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. அது யாரென்பது விரைவில் தெரியும்” எனத் தெரிவித்தார்.2 வீரர்களை வாங்கிவிட்டு அஸ்வினை வெளியேயேற்றிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்! அடுத்த கேப்டன் யார்? 2

இதற்கிடையே டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய நிர்வாகி ஒருவர் நிருபரிடம் கூறுகையில், “டெல்லி அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையே வீரரை மாற்றும் பேச்சு முடிந்துவிட்டது. பஞ்சாப் அணியில் இருந்து அஸ்வின் டெல்லி அணிக்கு வருகிறார். எங்கள் அணியில் இருந்து இரு இளம் வீரர்களை பஞ்சாப் அணிக்கு வழங்குகிறோம். அந்த இளம் வீரர்கள் குறித்து பேச்சு நடந்து வருகிறது. விரைவில் முறைப்படியான அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவித்தார்.

அஸ்வின் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குச் சென்றுவிட்டால், பஞ்சாப் அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அதேசமயம், அஸ்வின் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குச் சென்றாலும், அந்த அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யரே தொடர்ந்து இருப்பார் எனத் தெரியவருகிறது. • SHARE
 • விவரம் காண

  விராட் கோலியின் 3 வருட மகுடத்தை தூக்க பென் ஸ்டோக்ஸ் ஆடிய ஆட்டம் எது தெரியுமா?

  2020 விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் பென் ஸ்டோக்ஸை உலகின் சிறந்த வீரர் என்று அறிவித்துள்ளது. 2005-ல் ஆண்ட்ரூ பிளிண்டாஃப் இந்த விருதை அலங்கரித்த...

  இந்திய அணியின் சீனியர் வீரர்கள் செய்த காரியம்: யுவராஜ் சிங் வெளியிட்ட ரகசியம்

  நான் விளையாடிய காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டனர் என்று முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்தார். கொரோனா...

  இப்படி செய்தால் ஐ.பி.எல் தொடரை நடத்தலாம்; ஐடியா கொடுக்கும் ஆஷிஸ் நெஹ்ரா !!

  இப்படி செய்தால் ஐ.பி.எல் தொடரை நடத்தலாம்; ஐடியா கொடுக்கும் ஆஷிஸ் நெஹ்ரா கொரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் 13வது சீசன் ரத்தாகும் அபாயம் உள்ள நிலையில்,...

  உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் இவர் தான்; முன்னாள் வீரர் கிளார்க் புகழாரம் !!

  உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் இவர் தான்; முன்னாள் வீரர் கிளார்க் புகழாரம் சமகால கிரிக்கெட் உலகில் மூன்று விதமான போட்டிகளிலும் சிறந்த பேட்ஸ்மேனாக விராட்...

  உலகின் தலைசிறந்த 7 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த மைக்கெல் கிளார்க்; இந்திய வீரர்களுக்கு இடம் உண்டா..?

  உலகின் தலைசிறந்த 7 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த மைக்கெல் கிளார்க்; இந்திய வீரர்களுக்கு இடம் உண்டா..? தான் எதிர்த்தும் இணைந்தும் ஆடியதில், தன்னை பொறுத்தமட்டில்...