ஐபில் 2019: கொல்கத்தா அணியில் புதிதாக இணையும் இவர்கள்; யார் அவர்கள் தெரியுமா?? 1
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், கமலேஷ் நாகர்கோட்டி மற்றும் ஷிவம் மாவி ஆகியோருக்கு மாற்றாக, கேரள அணி வீரர் சந்தீப் வார்யர், கர்நாடகா சுழற் பந்துவீச்சாளர் கே.சி. காரியப்பா ஆகியோர்ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் சையத் முஸ்தாக் அலி டிராபி போட்டியில், சந்தீப் வாரியர் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சையத் முஸ்தாக் அலி டிராபி தொடரின் ஒரு போட்டியின் போது, ​​ஆந்திரா அணிக்கு எதிராக அற்புதமாக பந்துவீசி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் அதேநேரம், இறுதி வரை போராடி அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். இந்த பருவத்தில் விஜய் ஹசாரே டிராபி தொடரில் கேரளாவிற்கு 12 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த தொடரில் கேரளா அணிக்கு அதிக விக்கெட்டுகளை பெற்றவர் ஆனார். 27 வயதான சந்தீப் வாரியார், கடந்த சீசன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.

ஐபில் 2019: கொல்கத்தா அணியில் புதிதாக இணையும் இவர்கள்; யார் அவர்கள் தெரியுமா?? 2

இதற்கிடையில், கே.சி. காரியப்பா  கடந்த ஐபில் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 10 போட்டிகள் ஆடி 8 விக்கெட்டுகளை எடுத்தார். மேலும்,  சையத் முஸ்தாக் அலி டிராபியில், கர்நாடகா அணி கோப்பையை தட்டிச் செல்ல முக்கிய காரணமாக விளங்கினார். இத்தொடரில், 20.60 சராசரியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி கே.சி. காரியப்பா கர்நாடகா அணியை முன்னிலை படுத்தினார்.

ஐபில் 2019: கொல்கத்தா அணியில் புதிதாக இணையும் இவர்கள்; யார் அவர்கள் தெரியுமா?? 3

தனது வேகத்திற்க்காக பெரிதும் பேசப்படும் கமலேஷ் நாகர்கோட்டி, கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். மேலும், தற்போது வரை பின் பக்க தசைப்பிடிப்பின் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். ஆதலால், வருகின்ற ஐபில் தொடரில் கொல்கத்தா அணியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அண்டர் 19 அணியின் சக வீரரான, வேகப் பந்துவீச்சாளர் ஷிவம் மாவிக்கு பின் பகுதியில் ஒரு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் இவரும் தொடரில் ஆட முடியாத நிலை ஏற்பட்டு அணியில் இருந்து வெளியேறினார்.

இவர்கள் இருவருக்கும் மாற்றாக தான், கொல்கத்தா அணியில் கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியர், கர்நாடகாவை சேர்ந்த கே.சி. காரியப்பா இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

மார்ச் 24 ம் தேதி ஈடன் கார்டனில் நடக்கவுள்ள சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 2019ஆம் ஆண்டுக்கான ஐபில் தொடரை துவங்குகிறது கொல்கத்தா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *