கொல்கத்தா மற்றும் ஆர்சிபி இடையேயான இன்றைய போட்டி ரத்து ! இரண்டு முக்கிய வீரர்களுக்கு கொரோனா ! 1

கொல்கத்தா மற்றும் ஆர்சிபி இடையேயான இன்றைய போட்டி ரத்து ! இரண்டு முக்கிய வீரர்களுக்கு கொரோனா !

14வது ஐபிஎல் சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் தலா 10 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது

கொல்கத்தா மற்றும் ஆர்சிபி இடையேயான இன்றைய போட்டி ரத்து ! இரண்டு முக்கிய வீரர்களுக்கு கொரோனா ! 2

இந்நிலையில், இன்று நடைபெற இருந்த 30வது லீக் போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதயிருந்தது. இந்த போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் தற்போது இரண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் வந்ததால் இந்த போட்டியை ரத்து செய்து ஒத்திவைத்துள்ளனர். தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கு தான் கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது.

கொல்கத்தா மற்றும் ஆர்சிபி இடையேயான இன்றைய போட்டி ரத்து ! இரண்டு முக்கிய வீரர்களுக்கு கொரோனா ! 3

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. இதனால் பல இந்தியர்கள் பாதித்தும் உயிரிந்தும் வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக அதிகமாக அவர்களுக்கு கொடுக்கப்படும் ஆக்சிஜன் சிலண்டர்கள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதனால் சச்சின், பாட் கம்மின்ஸ், தவான் போன்ற கிரிக்கெட் வீரர்கள் நிதியுதவி செய்து வந்தனர்.

இந்நிலையில், இன்று கொல்கத்தா வீரர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஐபிஎல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ரசிகர்களிடையே அதிரிச்சியையும் ஏற்படுத்துகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரர்கள் வெளியேறியதால் ஐபிஎல் தொடர் நடத்த பல எதிரப்புகள் வந்தது. தற்போது இந்த செய்தி மேலும் பல எதிர்ப்புகளை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா மற்றும் ஆர்சிபி இடையேயான இன்றைய போட்டி ரத்து ! இரண்டு முக்கிய வீரர்களுக்கு கொரோனா ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *