இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி உள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி கடும் பயிற்சி செய்து வருகிறது.

மேலும், இந்த தொடரில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிகிறது. அதற்காக கேஎல் ராகுல் மற்றும் அஜின்கியா ரகானே ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கொடுக்கப் படலாம் எனவும் அதற்காக ரோஹித் சர்மா ஷிகர் தவான் உள்ளிட்டோர் வெளியே அமர்த்தி வைக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கர், ரிஷாப் பன்ட், ரஹானே ஆகியோருக்கு வாய்ப்பிருப்பதாகத் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித் துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, மே மாதம் 30ஆம் தேதியில் இருந்து ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்க இருக்கிறது. பல்வேறு நாட்டு அணிகளும் இதற்காக தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளன. இந்த வருட உலகக் கோப்பையை, இங்கிலாந்து, இந்திய அணிகள் வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் பரீட்சார்த்த முறையாக, பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறும்போது, ’’உலகக் கோப்பைப் போட்டிக்கான 15 பேர் கொண்ட உத்தேச அணியை தோராயமாக முடிவு செய்துள்ளோம். இருந்தாலும் இன்னும் வீரர்கள் அதில் இடம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

கடந்த ஒரு வருடமாக, டெஸ்ட், ஒரு நாள், டி20 போட்டிகளில் ரிஷாப் பன்ட் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உலகக் கோப்பைக்கான வீரர்கள் பட்டியலில், அவர் கவனத்தில் இருக்கிறார். அவர் ஓர் ’அரோக்கியமான தலைவலி’. இதற்கு முன் அவரது ஆட்டத்தில் முதிர்ச்சி தேவையாக இருந்தது. அதற்காக, இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டார். இப்போது அவரது செயல்பாடு சிறப்பாக இருக்கிறது.

ரஹானே, உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடியிருக்கிறார் (11 போட்டிகளில் 597 ரன். சராசரி 74.62). அதே போல விஜய் சங்கரும் கிடைக்கும் வாய்ப்புகளில் நன்றாக விளையாடி வருகிறார். இந்திய ஏ அணியின் மூலம் அவரும் திறமையை வளர்த்திருக்கிறார். இதனால் அவர்களும் கவனத்தில் இருக்கிறார்கள்’’ என்றார். • SHARE

  விவரம் காண

  டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது: விருதிமான் சஹா!!

  டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது என்று கூறியுள்ளார் விருதிமான் சஹா!! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில்...

  பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார் !!

  பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார்  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியை இந்திய அணி புறக்கணிக்க கூடாது என சச்சின்...

  பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..?

  பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..? காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்ரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ- முகமது நடத்திய தற்கொலை...

  ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா !!

  ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து...

  அரசு சொல்வதை செய்வோம்: ரவி சாஸ்திரி!!

  புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் பாகிஸ்தானுக்கு எதிராகக் குவிந்து வரும் நிலையில், உலகக்கோப்பைப் போட்டிகளில்...