கே.எல் ராகுல்

இவர்கள் இருவரும் கொடுக்கும் ஆதரவில் தான் நான் இன்னும் அணியில் இருக்கிறேன் என்று பேட்டி அளித்துள்ளார் கேஎல் ராகுல்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி டி20 தொடரை முடித்துவிட்டு ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது போட்டியை ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடியது.

இதில் முதலில் பேட்டிங் செய்து இலங்கை அணி 215 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. அதைத் தொடர்ந்து எளிய இலக்காக பார்க்கப்பட்ட ஸ்கோரை துரத்திய இந்திய அணிக்கு இலங்கை பவுலர்கள் அச்சுறுத்தலாக இருந்தனர். ஒரு கட்டத்தில் வெறும் 86 ரன்கள் மட்டுமே அடித்திருந்தபோது நான்கு விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தடுமாறியது.

"இவங்க ரெண்டு பேரும் இல்லைன்னா.. என்னை எப்பவோ டீம விட்டு தூக்கீருப்பாங்க" - இன்னும் டீமில் இருக்க காரணமென்ன? கேள்விக்கு கேஎல் ராகுல் பதில்! 1

அப்போது சற்று மோசமான ஃபார்மில் இருந்த கேஎல் ராகுல் ஹர்திக் பாண்டியா உடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோர் உயர்வதற்கு உதவினார். இப்போட்டியில் கேஎல் ராகுல் நிதானத்துடன் விளையாடியது இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் உதவியது.

வழக்கமாக கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் கேஎல் ராகுல், 2வது போட்டியில் 103 பந்துகளில் 64 ரன்கள் அடித்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் நேர்மறையான விமர்சனங்கள் வருகின்றது.

இவர் ஏன் இன்னும் அணியில் இருக்கிறார்? இவருக்கு எதன் அடிப்படையில் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது? என பல கேள்விகள் இந்த போட்டிக்கு முன்னர் கேட்கப்பட்டு வந்தன. அவை அனைத்திற்கும் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் பதில் அளித்துள்ள கேஎல் ராகுல், போட்டி முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட போதும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். அப்போது அவர் பேசியதாவது:

கே.எல் ராகுல்

“ரோகித் சர்மா என் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து 5வது இடத்தில் களமிறங்க வாய்ப்புகள் கொடுத்து வருகிறார். ராகுல் டிராவிட் நான் பல விமர்சனங்களை சந்திக்கும்பொழுது என்னுடன் இருந்து அறிவுரைகளை கூறுவார். இவர்கள் இருவரும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் மூலமாகத்தான் என்னால் இப்படி செயல்பட முடிந்தது. பல விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் அணி நிர்வாகம் கொடுக்கும் நம்பிக்கை என்னுடைய 100% ஆட்டத்தை வெளிக்கொணர்வதற்கு உதவுகிறது.

கீப்பிங் மற்றும் பேட்டிங் இரண்டு ரோலில் விளையாடுவதால் விரைவாக சோர்வடைகிறேன். இதற்கு முன்னர் 2019, 2020ஆம் ஆண்டுகளில் கீப்பிங் செய்திருந்தாலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு செய்வதால் இப்படி நடக்கிறது. அதற்காகவும் தீவிர பயிற்சிகள் செய்கிறேன்.

ஓப்பனிங் இறங்குவதை விட ஐந்தாவதாக வீரராக இறங்குவது சற்று கடினமானது. தற்போது மிடில் ஆர்டரில் இறங்கும் பொழுது, சுழல் பந்துவீச்சாளர்களை துவக்கு ஓவரிலேயே எதிர்கொள்ள வேண்டியது வரும். அதற்கும் தயாராகி வருகிறேன்.” என்றார்.

"இவங்க ரெண்டு பேரும் இல்லைன்னா.. என்னை எப்பவோ டீம விட்டு தூக்கீருப்பாங்க" - இன்னும் டீமில் இருக்க காரணமென்ன? கேள்விக்கு கேஎல் ராகுல் பதில்! 2

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *