ஒரே போட்டியில் பல சாதனைகள் குவித்த கே.எல் ராகுல்; மிகப்பெரும் பெருமையை பெற்றுள்ளார் !! 1

ஒரே போட்டியில் பல சாதனைகள் குவித்த கே.எல் ராகுல்; மிகப்பெரும் பெருமையை பெற்றுள்ளார்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியின் மூலம் பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல் ராகுல் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதி வருகின்றன.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஒரே போட்டியில் பல சாதனைகள் குவித்த கே.எல் ராகுல்; மிகப்பெரும் பெருமையை பெற்றுள்ளார் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு வழக்கம் போல் மாயன்க் அகர்வாலும், கே.எல் ராகுலும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில் மாயன்க் அகர்வால் 26 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மற்றொரு துவக்க வீரரும் பஞ்சாப் அணியின் கேப்டனுமான கே.எல் ராகுல் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 69 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 14 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் எடுத்து மிரள வைத்தார்.

பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல் ராகுல் இந்த போட்டியில் 132 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐ.பி.எல் தொடரில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

ஒரே போட்டியில் பல சாதனைகள் குவித்த கே.எல் ராகுல்; மிகப்பெரும் பெருமையை பெற்றுள்ளார் !! 3

கே.எல் ராகுல் இன்று படைத்த சாதனைகளின் விபரம் பின்வருமாறு;

1 – மிக குறைந்த இன்னிங்ஸில் 2000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சினை பின்னுக்கு தள்ளி முதலிடம்

2 – ஒரே போட்டியில் அதிக ரன்கள் குவித்த கேப்டன்கள் பட்டியலில் டேவிட் வார்னரை பின்னுக்கு தள்ளி முதலிடம்

3 – ஒரே போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *