சூர்யகுமார் யாதவ் இல்லை... டி.20 உலகக்கோப்பையில் இவர் ஆட்டம் வெறித்தனமாக இருக்கும்; சேன் வாட்சன் கணிப்பு !! 1

உலகக்கோப்பை தொடரில் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு கே.எல் ராகுல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் துவங்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16ம் தேதி நடைபெற உள்ளது.

சூர்யகுமார் யாதவ் இல்லை... டி.20 உலகக்கோப்பையில் இவர் ஆட்டம் வெறித்தனமாக இருக்கும்; சேன் வாட்சன் கணிப்பு !! 2

ஒவ்வொரு அணியின் கணவுக்கோப்பையாக இந்த உலகக் கோப்பை தொடர் இருப்பதால் தொடரின் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் உலககோப்பை தொடர் நெருங்கிக் கொண்டு வருவதால் இந்த தொடரில் எந்த அணி பலமான அணியாக இருக்கும்..? எந்த இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்..? எந்த பேட்ஸ்மேன் சிறப்பாக செயல்படுவார்.?? எந்த பந்துவீச்சாளர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்..? என்பது போன்று பல்வேறு விதமான தகவல்களையும், எந்த அணியுடன் எப்படி செயல்பட வேண்டும் என்பது போன்ற யோசனைகளையும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தெரியப்படுத்தி வருகின்றனர்.

சூர்யகுமார் யாதவ் இல்லை... டி.20 உலகக்கோப்பையில் இவர் ஆட்டம் வெறித்தனமாக இருக்கும்; சேன் வாட்சன் கணிப்பு !! 3

அந்த வகையில் காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பின்பு இந்திய அணியில் விளையாட துவங்கி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பின் மீண்டும் சிறப்பாக விளையாடி வரும் கே எல் ராகுல் உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்று ஷேன் வாட்சன் பாராட்டியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் இல்லை... டி.20 உலகக்கோப்பையில் இவர் ஆட்டம் வெறித்தனமாக இருக்கும்; சேன் வாட்சன் கணிப்பு !! 4

இது குறித்து ஷேன் வாட்சன் பேசுகையில்,“கே எல் ராகுல் எனக்கு பிடித்த சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராவார், அவர் எப்பொழுதெல்லாம் ஆக்ரோஷமாக விளையாடுகிறாரோ அப்பொழுதெல்லாம் சிறப்பாக செயல்படுகிறார். அவர் போட்டியை கட்டுப்படுத்த வேண்டும் என முயற்சி செய்வதில்லை, அவருக்கு நிறைய திறமை உள்ளது.ஒவ்வொரு பந்திர்க்கும் அதற்கு ஏற்றவாறு சிறப்பாக செயல்படுகிறார். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் பந்து வீசினாலும் மைதானங்களில் அனைத்து பகுதிகளிலும் பேட்டிங் செய்யக் கூடிய திறமை அவரிடம் உள்ளது. இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பது போல் செயல்படும் கே எல் ராகுலின் பேட்டிங்கை நான் மிகவும் ரசிக்கிறேன், எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லாமல் 180 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் அவருடைய திறமை மிகவும் அருமையானது, இதையே அவர் தொடரும் பட்சத்தில் ஆஸ்திரேலிய மைதானத்தில் நிச்சயம் பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரும் தொந்தரவாக இருப்பார்” என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள்நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.