நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளுக்காக நியூசிலாந்து அணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியா வந்தது. தற்போது நியூசிலாந்து அணி மும்பையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
வருகின்ற 22ஆம் தேதி முத்ல ஒருநாள் போட்டி துவங்க உள்ளது. அதற்கு முன்னர் இரு பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி விளையாட பி.சி.சி.ஐ ஏற்ப்பாடு செய்துள்ளது. இந்த இரு ஆட்டங்களும் அக்டோபர் 17 மற்றும் 19 ஆம் தேதி கிரிக்கெட் க்ளப் ஆப் இந்தியா (சி.சி.ஐ) மைதானத்தில் நடைபெறுகிறது.
நியூசிலாந்து ஏ அணி வாரியத் தலைவர் லெவனை எதிர்த்து விளையாடும். இந்த அணிக்கு கேப்டாக மும்பை பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் அய்யர் செயல்படுவார். இந்த அணியில், இந்திய இருந்து கலட்டி விடப்பட்ட பேட்ஸ்மேன் கே.எல் ராகுலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக களம் இறங்குவார். மேலும், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் நன்றாக செயல்பட்ட கரன் சர்மாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை தொடரில் இருந்து ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பெற்று வருகிறார். ஆனால், இறக்கி விடப்பட்ட இரண்டு போட்டிகளில் மிடில் ஆடரில் சொதப்பிய ராகுலுக்கு அடுத்து வந்த 14 போட்டிகளில் அணியில் ஒரு போட்டியில் கூட இறக்கி விடப்படவில்லை.
அவருக்குப் ப்திலாக இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக களம் இறங்கும் ஒருநாள் போட்டிக்கன அணியை மட்டுமே அறிவித்துள்ளது பி.சி.சி.ஐ.
இந்த இரு பயிற்சி ஆட்டங்களிலும் நன்றாக செயல்படும் பட்சத்தில், நியூசிலாந்திற்கு எதிரானா டி20 தொடரில் கலம் இறக்கப்படலாம்.
வாரியத் தலைவர் அணி விவரம் : பிரித்திவ் சா, சிவம் சௌத்ரி, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), கருன் நாயர், குர்கரீட் சிங் மேன், மிலிந்த் குமார், ரிசப் பாண்ட் (விக்கெட் கீப்பர்), சதாப் கான், கரன் ஷர்மா, தவால் குல்கர்னி, ஜயதேவ் உனத் காட், அவேஷ் கான், கே.எல் ராகுல்.
கடைசியாக நியூசிலாந்து அணி இந்தியா வந்த போது, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாகவும், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்றும் இழந்தது. அதிலும் குறிப்பாக, கடைசி ஒருநாள் போட்டியில், அமித் மிஸ்ராவின் சுழலில் சிக்கி 79 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து.
ஆனால், அதற்கு பின் இந்திய அணியின் கேப்டனும் மாறியாச்சு. யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் தரவரிசையில் முன்னேறி, எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றனர். இவையனைத்தையும் விட, ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடி ஆட்டம் தான் ஹாட்.
இதுகுறித்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில்,
“குல்தீப் மற்றும் சாஹல் இருவரும் மிகவும் திறமை வாய்ந்த பவுலர்கள். ஐபிஎல்-ல் தங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர்கள், இப்போது இந்திய அணிக்காக அசத்தி வருகின்றனர். மிகவும் வெற்றிகரமான பவுலர்களாக அவர்கள் வலம் வருகின்றனர். இத்தொடர் எங்களுக்கு மிகவும் கடுமையானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.
அஷ்வின் மற்றும் ஜடேஜா அணியில் இடம்பிடிக்காதது குறித்து பேசிய வில்லியம்சன், “இந்திய அணியில் மிகவும் தரம் வாய்ந்த பல வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இதனால் தான் அணியின் முக்கிய பவுலர்களுக்கு தொடர்ந்து ஓய்வளிக்கப்பட்டு வருகிறது. எந்த வீரராலும், அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில், அந்தளவிற்கு நிறைய போட்டிகள் இருக்கும். இது இயற்கையானது தான், ஆனால் இந்திய அணி எப்போதும் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வலிமையான அணியாகவே இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும்” என்றார்.
நியூசிலாந்துடனான 3 போட்டிகள் கொண்ட இந்தியாவின் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிடில் ஆரடர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டு தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், ஷ்ருதுல் தகூர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகொயோர் யோ-யோ உடல் தகுதி தேர்வில் தோல்வி அடந்தைதால் அவர்கள் பெயர் பரிசீலிக்கப்படவில்லை.
இந்திய அணி : விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, சிகர் தவான், அஜின்கியா ரகானே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஜவேந்திர சகால், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷ்ரதுல் தகூர்