ரோஹித் சர்மா இல்லை; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 1

ஆஸ்திரேலிய அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி துபாயில் இருந்தே ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆஸ்திரேலியா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் ஆடவுள்ளது.

இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ இன்று அறிவித்துள்ளது.

ரோஹித் சர்மா இல்லை; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 2

காயம் காரணமாக தவித்து வரும் ரோஹித் சர்மாவின் பெயர் ஆஸ்திரேலியா அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. ரோஹித் சர்மா இல்லாததால் அவரது துணை கேப்டன் பதவி கே.எல் ராகுலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், ஐபிஎல் தொடரில் மிக அருமையாக விளையாடிய சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், மணிஷ் பாண்டே, மாயன்க் அகர்வால் போன்ற இளம் பேட்ஸ்மேன்களுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர வழக்கம் போல் ஷிகர் தவான், கோஹ்லி ஹர்திக் பாண்டியா, சாஹல், ஜடேஜா, குல்தீப் யாதவ் போன்ற அனைத்து சீனியர் வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ரோஹித் சர்மா இல்லை; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 3

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஐபிஎல் தொடரில் அபாரமாக பந்துவீசிய நவ்தீப் சைனி மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி;

விராட் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மன் கில், கே.எல் ராகுல் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), ஸ்ரேயஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, மாயன்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *