புதிய பிரச்சினையை கிளப்பிய பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல்! ஆதரவு தெரிவிப்பார்களா மற்ற கேப்டன்கள் ! 1

புதிய பிரச்சினையை கிளப்பிய பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல்! ஆதரவு தெரிவிப்பார்களா மற்ற கேப்டன்கள் !

14வது ஐபிஎல் சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 10 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. 11வது லீக் போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 195 ரன்கள் குவித்தது.

பஞ்சாப்பை பதம் பார்த்த டெல்லியை பாராட்டி வரும் ரசிகர்கள் ! 2வது இடத்தை பிடித்து அசத்தல் ! 2

இதில் தொடக்க வீரர்கள் கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஜோடி சேர்ந்து 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.இவர்களுக்கு பின் களமிறங்கிய கெயில், தீபக் ஹூடா, பூரன், ஷாருக்கான் சிறப்பாக விளையாடி நல்ல முடிவை கொடுத்தனர்.

அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 69 ரன்கள் மற்றும் கே எல் ராகுல் 61 ரன்கள் குவித்து இருக்கிறார்கள். பஞ்சாப் பேட்ஸ்மன்களின் விக்கெட்டை எடுக்க டெல்லி பவுலர்கள் திணறினார்கள். இதில் கிறிஸ் வோக்ஸ், லுக்மா மெரிவாலா, ரபாடா, ஆவேஷ் கான் தலா 1 விக்கெட் எடுத்து இருக்கிறார்கள்.

பஞ்சாப்பை பதம் பார்த்த டெல்லியை பாராட்டி வரும் ரசிகர்கள் ! 2வது இடத்தை பிடித்து அசத்தல் ! 3

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி தங்களது சிறப்பான ஆட்டத்தால் 18.2 ஓவரிலே 198 ரன்கள் எடுத்து தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளனர். இதில் டெல்லி பேட்ஸ்மன்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி இருந்தார்கள்.

குறிப்பாக ஷிகர் தவான் 92 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். இவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டுள்ளது. பிரித்வி ஷா 32, ஸ்டோய்ன்ஸ் 27, பண்ட் 15, லலித் 12, ஸ்மித் 9 ரன்கள் அடித்திருக்கிறார்கள். டெல்லி பவுலர் ரிச்சர்ட்சன் 2 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

புதிய பிரச்சினையை கிளப்பிய பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல்! ஆதரவு தெரிவிப்பார்களா மற்ற கேப்டன்கள் ! 2

இந்நிலையில், நேற்றயை போட்டியில் தோல்விக்கான காரணத்தை சொல்லிய பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல் “இந்த போட்டியில் நாங்கள் எங்களது சிறப்பை கொடுத்தோம். நான் மற்றும் மயங்க் சிறப்பாக விளையாடினோம். ஆனால் இந்த போட்டியில் பவுலிங் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. என்னென்றால் இந்த போட்டியில் பனி அதிகமாக இருந்தது.

பனி அதிகமாக இருந்தால் பந்துவீச்சாளர்களுக்கு பந்து கையில் சரியாக நிற்காது. நினைத்த பந்தை போட முடியாது. இருந்தாலும் எங்கள் பவுலர்கள் சிறப்பாக பந்துவீச முயற்சித்து வந்தார்கள். இதற்காக நான் நடுவரிடம் ஆட்டத்திற்கு இரண்டு முறை பந்தை மாற்றினால் இந்த பிரச்சனை வராது என்றேன். ஆனால் விதிமுறை என்று ஒன்று இருக்கிறது” என்று பேசியிருக்கிறார். கே எல் ராகுலின் இந்த கருத்திற்கு மற்ற அணிகளும் ஆதவுர தெறிவித்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

புதிய பிரச்சினையை கிளப்பிய பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல்! ஆதரவு தெரிவிப்பார்களா மற்ற கேப்டன்கள் ! 3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *