14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சீசனில் 8 அணிகளும் புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்து பலமாக உள்ளது.

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் மும்பையில் மோதுகிறது. 

மொயின் அலி தொடர்பான மற்றொரு சர்ச்சை, இதற்கு இந்த பெண் தான் காரணம் ! யார் இவர் ? 2

இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக வீரர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பிசிசிஐ கடுமையான பயோ பப்புள் விதிமுறைகளை விதித்து இருக்கிறது. மற்றொரு பக்கம் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் அனைவரும் அனைத்து அணிகளுக்கும் உரிய ஆலோசனைகளை கூறி வருகின்றனர். 

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அனைவரும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மும்பை அணியின் ஸ்பின்னர் ராகுல் சஹார் தனது ஐபிஎல் கேப்டன் ரோகித் சர்மாவையும், சர்வதேச கேப்டன் விராட் கோலி பற்றி  பேசியிருக்கிறார். இவர் 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்ற போது அணியில் இடம் பெற்று விளையாடி இருக்கிறார்.

அதேபோல்,  2019 இல் இந்திய டி20 அணியில் அறிமுகமாகி இருக்கிறார். இதன் பிறகு தற்போது நடைபெற்று முடிந்த இங்கிலாந்து டி20 தொடரில் பங்கு பெற்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக விளையாடி இருந்தார்.

கோலியும் சரி, ரோகித் சர்மாவும் சரி என்மேல நிறைய நம்பிக்கை வெச்சுருக்காங்க ! மும்பை இந்தியன்ஸ் வீரர் நெகிழ்ச்சி 2

தற்போது இவர் தனது இரண்டு கேப்டன்களையும் பெருமையாக பேசி இருக்கிறார். ராகுல் சஹார் கூறுகையில் “மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் இந்திய கேப்டன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் என்மீது அதிக அளவில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். நமது கேப்டன்கள் நம்மீது நம்பிக்கை வைத்தாலே, நமது தன்னம்பிக்கை மிகுந்த உயரத்தை அடையும்” என்று ராகுல் கூறியிருக்கிறார். 

கோலியும் சரி, ரோகித் சர்மாவும் சரி என்மேல நிறைய நம்பிக்கை வெச்சுருக்காங்க ! மும்பை இந்தியன்ஸ் வீரர் நெகிழ்ச்சி 3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *