தொடை நடுங்கி பசங்க.. இடது-கை பவுலிங்னா இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு அல்லு, மிட்ச்சல் ஸ்டார்க்-க்கு வாழ்த்துக்கள் - குத்திக்காட்டி பேசிய பாகிஸ்தான் ஜாம்பவான்! 1

தொடர்ந்து இடதுகை பவுலர்களுக்கு இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட் இழந்து வருவதை குறிப்பிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வாசிம் அக்ரம்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிட்ச்சல் ஸ்டார்க் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். முதல் ஒருநாள் போட்டியில் ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்தனர்.

தொடை நடுங்கி பசங்க.. இடது-கை பவுலிங்னா இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு அல்லு, மிட்ச்சல் ஸ்டார்க்-க்கு வாழ்த்துக்கள் - குத்திக்காட்டி பேசிய பாகிஸ்தான் ஜாம்பவான்! 2

ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் எந்த ஒரு பார்ட்னர்ஷிப்பும் அமையவில்லை. 117 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இதனை ஆஸ்திரேலியாவின் துவக்க வீரர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து 11 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று தந்தனர்.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு இடது-கை பந்துவீச்சாளர்களிடம் பலவீனம் இருப்பது இது முதல் முறையல்ல. 2017ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி பைனலில் முகமது அமிர் பந்துவீச்சில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து கோப்பையையும் இழந்தனர். 2019ஆம் ஆண்டு அரையிறுதி போட்டியில் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை இழந்தனர்.

தொடை நடுங்கி பசங்க.. இடது-கை பவுலிங்னா இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு அல்லு, மிட்ச்சல் ஸ்டார்க்-க்கு வாழ்த்துக்கள் - குத்திக்காட்டி பேசிய பாகிஸ்தான் ஜாம்பவான்! 3

ஆஸ்திரேலிய தொடரில் மீண்டும் ஒருமுறை இது நிகழ்ந்திருக்கிறது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அணுகுமுறையை குறிப்பிட்டு தனது பேட்டியில் விமர்சித்திருக்கிறார் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம்.

“விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள். முதல் போட்டியில் கேஎல் ராகுல் நன்றாக விளையாடி வெற்றியும் பெற்றுக் கொடுத்தார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் இடது-கை பவுலர்களிடம் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. ஒட்டுமொத்த அணிக்கும் பிரச்சனை இருக்கிறது. குறிப்பாக இடதுகை பவுலர்கள் பந்தை உள்ளே கொண்டுவரும்பொழுது திணறியிருக்கிறார்கள். இந்த பிட்ச்சில் விளையாடியதை பார்க்கையில் ஆஸ்திரேலிய மைதானங்களில் விளையாடியது போன்ற உணர்வு எனக்கு இருந்தது.”

“மொத்த அணியுமே இடது-கை பந்துவீச்சாளர்களுக்கு திணறுவதை இப்போதுதான் பார்க்கிறேன். இன்று நேற்று மட்டுமில்லை, பல வருடங்களாக அவர்கள் இந்த பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள். சிறந்த பேட்ஸ்மேன்களாக இருப்பவர்களே திணறும்பொழுது இளம் வீரர்கள் என்ன செய்ய முடியும். சரி செய்ய முயற்சி செய்தும் பலனில்லை என்பது போல தெரிகிறது.”

விராட் கோலி, ரோகித் சர்மா

“இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது மழை பெய்த பிறகு பிட்ச்சை பார்க்கையில் நியூசிலாந்து மைதானங்களில் இருப்பது போன்று பச்சைபசேல் என தெரிந்தது. இதுவும் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக முடிந்திருக்கிறது. பிட்ச்சை தயார் செய்தவருக்கு நிச்சயம் வாழ்த்துக்களை கூறியாக வேண்டும். பராமரிப்பாளர் கடும் போட்டி நிறைந்த பிட்ச்சை தயார் செய்து கொடுத்தார். ஆஸ்திரேலியாவிற்கு மட்டுமல்ல, சிராஜ் வீசிய சில ஓவர்களை பார்த்தேன். அவருக்கும் இரண்டு பக்கங்களிலும் நன்றாக ஸ்விங் ஆனது. இந்திய பவுலர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தெளிவாக தெரிகிறது.” என தனது பேட்டிகள் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *