முதல் போட்டியின் தோல்விக்குப் பின் விராட் கோலியின் மீது கங்குலி பாய்ச்சல் 1

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடயேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் டாம் லேடதம் மற்றும் ராஸ் டெய்லர் ஆகிய இரு வீரர்களின் அபார ஆட்டத்தால் நியூசிலாந்து அணி இந்திய அணியை 6 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தியது.

இந்த தோல்விக்குப் பின் விராட் கோலியின் மீது இந்திய அணியின் முன்னாள கேப்டன் சௌரவ் கங்குலி சூசகமாக அறிவுறைகள் செய்து அவர் மீது காட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.முதல் போட்டியின் தோல்விக்குப் பின் விராட் கோலியின் மீது கங்குலி பாய்ச்சல் 2

சௌரவ் கங்குலி போட்டிக்கு பின் கூறியதாவது.;

கோலி தற்போது சற்று கவனித்து முன்னேறுவார். இந்தியாவில் கூட ஒரு சில போட்டிகள் தோற்றுவிடுவோம் என்பதை தற்போது அவர் உணர்ந்திருப்பார். அவர் ஒன்றும் சூப்பர் மணிதர் இல்லை. எந்த ஒரு கேப்டனும் ஒரு போட்டி கூட தோற்க்காமல் இருக்க முடியாது என்பது நிதர்சனம்.

தோனியின் கடைசி ஒரு வருட கேபிடன்சியைப் பாருங்கள். அவர் வங்கதேச அணியுடன் தோற்றிருக்கிரார். தென்னாப்பிரிக்க அணி இங்கு வந்து நம்மையே தோற்கடித்தது. இதே மண்ணில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணி நம்மை டி20 உலகக்கோப்பையின் அரையிருதியில் தோற்றது.

கோலியும் அதே போல் தான். அவர் மனிதர் தான். அவர் தோற்றுபோவார். அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இது ஒரு வலிமையான அணி. நியூசிலாந்தின் மிடில் ஆடர் ஆஸ்திரேலிய அணியைப் போன்றது இல்லை. இந்திய பந்து வீச்சாளர்களுக்கு தற்போது ஒரு பரிட்சைக் களம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு இது தயாராக சரியான ஒரு தொடராகும். தோற்றாலும் வெற்றி பெற்றாலும் இந்திய அணிக்கு நல்லது தான்.முதல் போட்டியின் தோல்விக்குப் பின் விராட் கோலியின் மீது கங்குலி பாய்ச்சல் 3

டாம் லேதம் மற்றும் டெய்லர் இருவரும் குல்தீப் யாதவை மிக நன்றாக ஆடினர். லேதம் நன்றாக ஸ்வீப் ஆடினார். விராட் கோலி இன்னும் சரியாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது அவருக்கு பாடமாகும். நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் நன்றாக் ஆடினர். கடந்த இரண்டு வருடங்களில் வெளிநாட்டினர் இந்தியாவில் இவ்வளவு அழகாக ஸ்பின் ஆடி பார்த்ததில்லை.India Vs New Zealand, 200th ODI felicitation, MCA, Ashish Shelar, Ranji Trophy, Mumbai,

கோலி மிக நன்றாக் ஆடினார். பாதியின் சென்று நான் ஆடுகளத்தைப் பார்த்தேன். அப்படி ஒரு ஆடகளத்தில் விராட் ஆடியது ஒரு அற்புதமான் ஆட்டம். நன்றாக் ஆடி ஆட்டத்தை திசை திருப்பினார் கோலி.

எனக் கூறினார் சௌரவ் கங்குலி.

 

ஒருநாள் போட்டியில் 31-வது சதம்: பாண்டிங்கை முந்திய வீராட்கோலி

வீராட்கோலி தனது 200-வது ஒருநாள் போட்டியில் ‘சதம்’ அடித்தார். ஆனால் அந்த சதம் பலன் இல்லாமல் போனது. அவர் 192 இன்னிங்சில் 31-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக செஞ்சூரி எடுத்து 2-வது இடத்தில் இருந்த ரிக்கிபாண்டிங்கை முந்தினார். அவர் 365 இன்னிங்சில் 30 சதம் அடித்து இருந்தார்.

தெண்டுல்கர் 49 சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார். அவரை தொட வீராட்கோலிக்கு இன்னும் 18 செஞ்சூரி தேவை.

முதல் போட்டியின் தோல்விக்குப் பின் விராட் கோலியின் மீது கங்குலி பாய்ச்சல் 4

28 வயதான அவர் 2008-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். இந்த ஆண்டில் இதுவரை 5 செஞ்சூரிகளை அடித்து உள்ளார். 2012-ம் ஆண்டிலும் இதே மாதிரி 5 சதம் எடுத்து இருந்தார். இலங்கை அணிக்கு எதிராக தான் அதிகபட்சமாக 8 செஞ்சூரி எடுத்துள்ளார். இந்திய மண்ணில் 13 சதத்தை பதிவு செய்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *