ஈவு இரக்கம் காட்டாத கோஹ்லி… கடைசி போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்தியா !! 1
ஈவு இரக்கம் காட்டாத கோஹ்லி… கடைசி போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்தியா

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்றது.

இந்த தொடரின் முதல் ஐந்து போட்டிகள் முடிவில் 4 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில்  இரு அணிகள் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

ஈவு இரக்கம் காட்டாத கோஹ்லி… கடைசி போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்தியா !! 2

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா வீரர்கள் வழக்கம் போல் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் வெறும் 204 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

ஈவு இரக்கம் காட்டாத கோஹ்லி… கடைசி போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்தியா !! 3

இதனையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 15 ரன்னிலும், தவான் 18 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும் இதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் கோஹ்லி – ரஹானே கூட்டணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இந்த கூட்டணி நிலைத்து நின்று ஆடியதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஈவு இரக்கம் காட்டாத கோஹ்லி… கடைசி போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்தியா !! 4

கேப்டன் கோஹ்லி 129 ரன்களுடனும், துணை கேப்டன் ரஹானே 34 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதன் மூலம் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 5-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *