என் ஆசான் தலைமையில் விளையாட ஆவலாக இருக்கிறேன்: தயாராகும் சென்னை வீரர் 1

கிருஷ்ணப்ப கௌதம் கர்நாடக அணிக்காக மிகச் சிறப்பாக உள்ளூர் போட்டியில் விளையாடி வரும் வீரர். ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் வீரராக மிகச் சிறப்பாக விளையாடக் கூட இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் 9 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

இருப்பினும் சென்னை அணியில் சீனியர் ஆல்ரவுண்டர் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயீன் அலி இருக்கையில் இவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஒரு போட்டியில் கூட சென்னை அணியில் இவர் விளையாடாத நிலையில், இந்திய அணிக்கு முதல் முறையாக விளையாடப் போகிறார்.

IPL 2018: RR's Krishnappa Gowtham 'on top of the world' after pulling off  heist vs MI - Cricket Country

கர்நாடக அணி சார்பாக உள்ளூர் தொடர்களில் மிக சிறப்பாக விளையாடி வரும் இவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இந்திய தேர்வு குழு தற்போது வழங்கியிருக்கிறது. வருகிற ஜூலை மாதம் 13ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட தயாராக இருக்கிறார்.

ராகுல் டிராவிட் தலைமையில் விளையாட நான் ஆவலாக இருக்கிறேன்

இது பற்றி பேசியுள்ள அவர் இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது தற்போது நிறைவேறி இருக்கிறது, அதிலும் குறிப்பாக ராகுல் டிராவிட் தலைமையில் செயல்படும் இந்திய அணியில் விளையாட மிக ஆர்வமாக உள்ளேன். அவரது தலைமையின் கீழ் விளையாடினால் நிச்சயமாக நிறைய அறிவுரைகளை அவர் கூறுவார்.

IPL 2021 auction: K Gowtham becomes most expensive uncapped Indian player

ஒரு கிரிக்கெட் வீரரும் அவரது தலைமையில் விளையாட தற்பொழுது ஆசைப்படுகின்றனர். எனக்கு அவரது தலைமையில் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாட போவதை நினைத்தால் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

மிகச் சிறப்பாக கேரம் பால் போடக்கூடிய இவர் அதே சமயம் மிக சிறப்பாக பேட்டிங் செய்வார். இதுவரை 32 பஸ்ட் கிளாஸ் போட்டிகளில் விளையாடி 116 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேசமயம் 737 ரன்கள் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *