Cricket, Champions Trophy, India, Pakistan, Hardik Pandya, Ms Dhoni, Virat Kohli

இரண்டு நாட்களுக்கு முன்பு சாம்பியன்ஸ் டிராபி 2017 இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது வென்றது பாகிஸ்தான்.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சாளர்களை பிரித்து மேய்ந்தனர். இதனால், பக்கர் சமானின் அதிரடி சதத்தால் பாகிஸ்தான் அணி 338 ரன் அடித்தது. பிறகு இந்த கடினமான இலக்கை துரத்தியது இந்தியா.

ஹர்டிக் பாண்டியா பேட்டிங் பார்த்து ட்வீட் செய்தார் க்ருனால் பாண்டியா 1

ஆரம்பத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.முதல் ஓவரில் ரோகித் சர்மா வெளியேற, மூன்றாவது ஓவரில் இந்திய கேப்டன் விராட் கோலி பெவிலியன் திரும்பினார். ஷிகர் தவான் மற்றும் யுவராஜ் சிங் ஜோடி இந்திய அணியை காப்பாற்றும் என இந்திய ரசிகர்கள் நினைத்த போது, ஜோடியும் பிரிந்தது. அடுத்து வந்த தோனி, கேதார் ஜாதவ் நிலைத்து நிற்காத நிலையில், இந்திய அணி 100 ரன் கூட தொடாது என நினைத்தார்கள்.

ஆனால், அடுத்து வந்த ஹர்டிக் பாண்டியா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை ஒரு கை பார்த்தார். 6 சிக்ஸர், 4 பவுண்டரி என நான்கு திசையிலும் பந்தை பறக்கவிட்டார் ஹர்டிக் பாண்டியா. சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் வாங்கினார். இவர் தான் இந்தியாவின் கடைசி நம்பிக்கை என்று நினைக்கும் போது, பாண்டியாவை ரன்-அவுட் செய்தார் ரவீந்திர ஜடேஜா. இதனால், இந்திய அணி 158 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

ஹர்டிக் பாண்டியா பேட்டிங் பார்த்து ட்வீட் செய்தார் க்ருனால் பாண்டியா 2

இந்த போட்டி முடிந்ததுக்கு பிறகு தனது சகோதரரை பாராட்டினார் க்ருனால் பாண்டியா. இங்கே பாருங்கள்:

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *