குல்தீப் யாதவிற்கு பதிலாக அஸ்வினை அணியில் எடுக்கலாம்; மைக் ஹசி சொல்கிறார் !! 1
குல்தீப் யாதவிற்கு பதிலாக அஸ்வினை அணியில் எடுக்கலாம்; மைக் ஹசி சொல்கிறார்

இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவிற்கு பதிலாக அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி  தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

குல்தீப் யாதவிற்கு பதிலாக அஸ்வினை அணியில் எடுக்கலாம்; மைக் ஹசி சொல்கிறார் !! 2

இதில் டி.20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடர இங்கிலாந்து அணியும் கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி துவங்க உள்ளது.

சமபலம் கொண்ட இரு அணிகள் மோத உள்ள இந்த டெஸ்ட் தொடர் கிரிக்கெட் உலகில் அதிக எதிர்பார்ப்புகளை உண்டாக்கியுள்ள நிலையில், முன்னாள் , இந்நாள் வீரர்கள் பலரும் இந்த தொடர் குறித்து தங்களது கருத்துகளை தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.

குல்தீப் யாதவிற்கு பதிலாக அஸ்வினை அணியில் எடுக்கலாம்; மைக் ஹசி சொல்கிறார் !! 3

அந்த வகையில் இந்த தொடர் குறித்து கருத்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஹசி, இந்த தொடரில் இந்திய அணி குல்தீப் யாதவிற்கு பதிலாக அஸ்வினை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

அணியில் தனது இடத்தை தக்க வைக்க அஸ்வினுக்கு தகுதி இருக்கிறது. அவர் புத்திசாலித்தனமாக டெஸ்ட் பவுலர்.

குல்தீப் யாதவிற்கு பதிலாக அஸ்வினை அணியில் எடுக்கலாம்; மைக் ஹசி சொல்கிறார் !! 4

ஆஸ்திரேலிய ஆப்-ஸ்பின்னர் நாதன் லயன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடது கை பேட்ஸ்மேனும் சிறப்பாக பந்து வீசினர். இதனால் அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக முக்கிய பங்கு வகிப்பார். அவரை பயன்படுத்த வேண்டும்.

குல்தீப் யாதவ் இளம் வீரர் அவரது வழியில் அவரை கற்றுக்கொள்ள விட வேண்டும். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் தனது பணியை சிறப்பாக செய்வார் என்று உறுதியாக கூறுகிறேன்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *