இனிதான் இவரது ஆட்டம் துவங்கும்: இளவயது பயிற்ச்சியாஅளர் அதிரடிடி பேட்டி 1

குல்தீப் யாதவின் இளவயது பயிற்சியாளர் கபில்தேவ் பாண்டே சமீபத்தில் குல்தீப் யாதவ் பற்றி சில வார்த்தைகள் கூறி இருக்கிறார். மேலும் குல்தீப் யாதவ் நடக்க இருக்கின்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மிக சிறப்பாக செயல்பட்டு தன்னுடைய பழைய திறமையை காண்பிப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குல்தீப் யாதவ் எப்பொழுதும் விக்கெட்டை கைப்பற்றக் கூடிய ஒரு பந்து வீச்சாளர்

குல்தீப் யாதவ் இளம் வயதில் இருந்து நிறைய பயிற்சி பெற்ற ஒரு பந்துவீச்சாளர். எந்த போட்டியில் அவர் விளையாடினாலும் நிச்சயமாக குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டை எடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு விளையாடக் கூடிய ஒரு வீரர். அவர் இளம் வயதில் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளும் பொழுது தன்னுடைய பந்துவீச்சு திறமையால் என்னை ஆச்சரியப்படுத்தினார்.

Kuldeep Yadav grateful to India team management: I have always been told  why I didn't play - Sports News

நிச்சயமாக இந்திய அணிக்கு மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று அப்போது எனக்குத் தெரிந்திருந்தது. இந்திய அணிக்காக பல போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்டு அற்புதமாக பந்துவீசிய விக்கெட்டுகளையும் கைப்பற்றி கொடுத்து இருக்கிறார். இருப்பினும் ஒரு சில காலமாக அவர் தனது பந்து வீச்சில் சற்று சிரமபட்டு வருகிறார் என்று கூறியுள்ளார்.

மீண்டும் பழைய குல்தீப் யாதவ் ஆக தன்னுடைய முழு திறமையை இலங்கைக்கு எதிரான தொடரில் காண்பிப்பார்

குல்தீப் யாதவ் மிக அற்புதமாக கூக்கிலி பந்துகளை வீசுவார். அவருடைய மிகப்பெரிய பலமே அந்தப் அந்த தான். ஆனால் சமீபகாலமாக அவர் அதில் கோட்டை விடுகிறார். மேலும் அவரது ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் நிறைய ரன்கள் அடிக்கின்றனர். அதன் காரணமாகவே அவருக்கு வாய்ப்புகள் மிகவும் கம்மியாக வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவர் சோடை போக கூடிய ஒரு பந்து வீச்சாளர் கிடையாது.

He is a great instant advisor': Kuldeep Yadav hoping for MS Dhoni's  comeback to Team India | Hindustan Times

அவர் தன்னுடைய பந்துவீச்சில் தற்பொழுது முழு கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய பௌலிங் முறையை சற்று மாற்றி உள்ளார். நிச்சயமாக இலங்கைக்கு எதிராக நடக்க இருக்கும் அனைத்து போட்டிகளிலும் அவருக்கு விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டால் தன்னுடைய முழு திறமையை நிச்சயமாக காண்பிப்பார் என்றும் பழைய குல்தீப் யாதவை நாம் அனைவரும் பார்ப்போம் என்றும் கபில்தேவ் பாண்டே கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வருகிற ஜூலை மாதம் 13ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கொழும்பு மைதானத்தில் வைத்து விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *