நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக்

தனக்கு அதிக தொல்லை கொடுக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் யார் என்பதை இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் ஓபனாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2017ம் ஆண்டு அறிமுகமான இடது கை வேகப்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், தனது நேரத்தியான பந்துவீச்சு மூலம் வெகு விரைவாகவே இந்திய அணியில் தனக்கான இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டார். சைனாமேன் பந்துவீச்சாளரான இவர் தனது துல்லியமான பந்துவீச்சு மூலம் ரசிகர்கள் மனதிலும் விரைவாகவே இடம் பிடித்துவிட்டார்.

நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !! 2

அஸ்வின் போன்ற ஜாம்பவானையே ஓரங்கட்டும் அளவிற்கு சிறப்பாக பந்துவீசி வரும் குல்தீப் யாதவ் இதுவரை இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள், 59 ஒருநாள் போட்டிகள் மற்றும் 21 டி.20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கொரோனாவின் தாகத்தால் வீட்டிலேயே முடங்கி போயுள்ள கிரிக்கெட் வீரர்கள், சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் ஊடங்களுடனும் தொடர்ந்து பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !! 3

அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பேசிய குல்தீப் யாதவ், அதில் தனக்கு அதிக தொல்லை கொடுக்க கூடிய இரண்டு பேட்ஸ்மேன்களின் பெயரை ஓபனாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து குல்தீப் யாதவ் பேசியதாவது;

டிவில்லியர்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவருக்கும் பந்துவீசுவது மிகவும் கடினம். ஸ்மித்தை கூட ஒரளவிற்கு சமாளித்து விடலாம் ஆனால் டிவில்லியர்ஸுக்கு ஒவ்வொரு பந்துவீசும் போதும் பவுண்டரி அடித்து விடுவாரோ என்ற பயம் மனதிற்குள் இருந்து கொண்டே தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *