மழையால் மாஸ் வெற்றி பெற்ற பஞ்சாப்; கொண்டாடும் ரசிகர்கள் !! 1
மழையால் மாஸ் வெற்றி பெற்ற பஞ்சாப்; கொண்டாடும் ரசிகர்கள்

ஐ.பி.எல் டி.20 தொடரில் கொல்கத்தா பஞ்சாப் இடையேயான இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

மழையால் மாஸ் வெற்றி பெற்ற பஞ்சாப்; கொண்டாடும் ரசிகர்கள் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணி நரைன் 1 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதன் பின் வந்த ராபின் உத்தப்பா 34 ரன்களிலும், ராணா 3 ரன்னிலும் விக்கெட்டை இழந்து வெள்யேறினாலும்  மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அந்த அணியின் மற்றொரு துவக்க வீரர் கிறிஸ் லின் 41 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து கைகொடுத்தார்.

இதன் பின் தினேஷ் கார்த்திக் 43 ரன்கள் எடுத்து கைகொடுத்தன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள கொல்கத்தா அணி 191 ரன்கள் எடுத்தது.

மழையால் மாஸ் வெற்றி பெற்ற பஞ்சாப்; கொண்டாடும் ரசிகர்கள் !! 3

இதனையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெய்லும், கே.எல் ராகுல் துவக்கம் கொடுத்தனர்.

இருவரும் கொல்கத்தாவின் பந்துவீச்சை மைதானத்தின் நாளா புறமும் சிதறடித்து மளமளவென ரன் குவித்து கொண்டிருந்த போது, போட்டியின் 9வது ஓவரில் மழை குறுக்கிட்டது.

மழை நின்று போட்டி துவங்க நீண்ட நேரம் எடுத்து கொண்டதால் போட்டியின் ஓவர் 13ஆக குறைக்கப்பட்டு பஞ்சாப் அணிக்கு 128 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் களமிறங்கிய பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டி குறித்த ட்விட்டர் ரியாக்சன்;

https://twitter.com/TheMaddKiing/status/987680235695951874

https://twitter.com/ikpsgill1/status/987639139997696000

 

Leave a comment

Your email address will not be published.