இந்த வீரரை அடிச்சிக்கவே முடியாது; முன்னாள் சென்னை வீரரை புகழ்ந்து தள்ளிய பாலாஜி !! 1

இந்த வீரரை அடிச்சிக்கவே முடியாது; முன்னாள் சென்னை வீரரை புகழ்ந்து தள்ளிய பாலாஜி

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான சுப்ரமணியம் பத்ரிநாத்தை, மற்றொரு முன்னாள் தமிழக வீரரான பாலாஜி வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான சுப்ரமணியம் பத்ரிநாத், கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமானவர். வலது கை பேட்ஸ்மேனான இவர் தனது பேட்டிங் திறமையால் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடித்து, தான் விளையாடிய முதல் டி.20 போட்டியிலேயே 43 ரன்கள் குவித்ததன் மூலம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றாலும் பத்ரிநாத்திற்கு அதற்கு பிறகு இந்திய டி.20 அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்த வீரரை அடிச்சிக்கவே முடியாது; முன்னாள் சென்னை வீரரை புகழ்ந்து தள்ளிய பாலாஜி !! 2

தமிழக அணிக்காக 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்ததுள்ளார். அதே போல் ஐபிஎல் போட்டிகளுக்காக சிஎஸ்கே அணியிலும் விளையாடி இருக்கிறார். சென்னை அணிக்காக மொத்தம் 95 போட்டிகளில் விளையாடியுள்ள பத்ரிநாத் அதில் 1441 ரன்களை குவித்துள்ளார். இவரின் சராசரி 30.65 ஆகும்.

தற்பொழுது கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வரும் பத்ரிநாத் குறித்து பேசிய மற்றொரு முன்னாள் வீரரான பாலாஜி, பத்ரிநாத்தை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இந்த வீரரை அடிச்சிக்கவே முடியாது; முன்னாள் சென்னை வீரரை புகழ்ந்து தள்ளிய பாலாஜி !! 3

பத்ரிநாத் குறித்து பாலாஜி பேசியதாவது;

களமிறங்கும் முன்பே நான் சதமடிக்கப்போகிறேன் என்று யாராவது சொல்லி பார்த்திருக்கிறீர்களா? நான் 2005ல் பார்த்தேன். பத்ரிநாத்தை வெவ்வேறு கட்டங்களில் நான் பார்த்திருக்கிறேன். பெஸ்ட் ஸ்பின்னர்கள் எதிரணியில் இருந்த ஒரு போட்டியில், ஒரு மணி நேரத்தில் சதமடிக்கப்போகிறேன் என்று சொல்லியே அடித்தார் பத்ரிநாத். உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் கூட ஆம்புலன்சிலேயே மைதானத்திற்கு வந்த பத்ரிநாத் கையில் இருந்த டிரிப்ஸை கழட்டிவிட்டு களத்தில் இறங்கி விளையாடியவர். நிலைத்து நின்று விட்டால் அவரது விக்கெட்டை கைப்பற்றுவது மிகவும் கடினம்” என்று புகழ்ந்து பேசியுள்ளார் பாலாஜி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *