இந்திய அணிக்கு கிடைத்துள்ள பொக்கிஷம் இவர் தான்; முன்னாள் வீரர் புகழாரம் !! 1

இந்திய அணிக்கு கிடைத்துள்ள பொக்கிஷம் இவர் தான்; முன்னாள் வீரர் புகழாரம்

பேட்டிங் அணியாக மட்டுமே திகழ்ந்துவந்த இந்திய அணி தற்போது மிகச்சிறந்த பவுலிங் அணியாக திகழ்கிறது. பேட்டிங்கில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பெற்ற வெற்றிகள் எல்லாம் பெரும்பாலும் சிறப்பான பேட்டிங்கின் மூலமாகவே பெற்றதாக இருக்கும்.

ஆனால் தற்போது இந்திய அணி பவுலிங்கால் அதிகம் வெற்றி பெறும் இடத்தில் உள்ளது. பும்ராவின் வருகைக்கு பிறகு இந்திய அணியின் பவுலிங் யூனிட் வேற லெவலில் அசத்துகிறது. வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷன், நல்ல வேகம், துல்லியமான பவுலிங் என பும்ரா மிரட்டிவரும் நிலையில், கூடுதல் வலுசேர்க்கும் வகையில் இந்திய அணியில் இணைந்திருக்கிறார் நவ்தீப் சைனி.

இந்திய அணிக்கு கிடைத்துள்ள பொக்கிஷம் இவர் தான்; முன்னாள் வீரர் புகழாரம் !! 2

ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் ஆடி தனது வேகத்தின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டியதுடன் தேர்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்த நவ்தீப் சைனி, உலக கோப்பையில் வலையில் பந்துவீச இங்கிலாந்து சென்றிருந்தார். அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் எடுக்கப்பட்டிருந்தார். அணி நிர்வாகம் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றிக்கொண்டார்.

இதையடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணியிலும் நவ்தீப் சைனி எடுக்கப்பட்டுள்ளார். எனவே இனிமேல் இந்திய அணியில் அவர் நிரந்தரமாக ஆடுவது உறுதியாகிவிட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சைனி ஆடும் நிலையில், அவரைப்பற்றி தென்னாப்பிரிக்க அணியின் உதவி பேட்டிங் பயிற்சியாளரும் முன்னாள் ஆல்ரவுண்டரும் 1999 உலக கோப்பையின் தொடர் நாயகனுமான லான்ஸ் க்ளூசனர் புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்திய அணிக்கு கிடைத்துள்ள பொக்கிஷம் இவர் தான்; முன்னாள் வீரர் புகழாரம் !! 3

டெல்லி கிரிக்கெட் சங்கத்திலும் க்ளூசனர் பணியாற்றியுள்ளார் என்பதால், சைனியின் திறமையை ஏற்கனவே அறிந்தவர் என்றமுறையில், சைனியை புகழ்ந்து பேசியிருக்கிறார். சைனி குறித்து பேசிய க்ளூசனர், சைனிக்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய கிரிக்கெட்டில் 150 கிமீ வேகத்தில் வீசக்கூடிய ஃபாஸ்ட் பவுலர்களை பார்ப்பதெல்லாம் அரிது. சைனியின் பவுலிங் ஆக்‌ஷன், ஃபிட்னெஸ் எல்லாமே சிறப்பாக உள்ளது. அவர் 150 கிமீ அல்லது அதற்கு மேலான வேகத்தில் வீச விரும்புகிறார் என்பதே நான் அவருடன் பேசியதிலிருந்து அறிந்துகொண்டது என்று சைனியை புகழ்ந்துள்ளார் க்ளூசனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *