செஞ்சூரியன் டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் செல்லும் பந்தை லீவ் செய்ய வேண்டும் என சந்து போர்டு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கேப் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Shikhar Dhawan of India during day four of the first Sunfoil Test match between South Africa and India held at the Newlands Cricket Ground in Cape Town, South Africa on the 8th January 2018

முதல் இன்னிங்சில் 209 ரன்னில் ஆல்அவுட் ஆன இந்தியா, 2-வது இன்னிங்சில் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தென்ஆப்பிரிக்காவின் துள்ளியமான பந்து வீச்சால் 135 ரன்னில் சுருண்டது. பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் விக்கெட் கீப்பரிடமும், ஸ்லிப் திசையிலும் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தனர். 2-வது டெஸ்ட் நாளை செஞ்சூரியனில் நடைபெறுகிறது.

செஞ்சூரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் ஆடுகளத்தில் அதிக அளவில் பவுன்சும், வேகமும் இருக்கும். கேப் டவுன் போன்று பெருமளவில் ஸ்விங் இருக்காது எனக்கூறப்படுகிறது. இதனால் ஓரளவிற்கு ரன்கள் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hardik Pandya of India during day two of the first Sunfoil Test match between South Africa and India held at the Newlands Cricket Ground in Cape Town, South Africa on the 6th January 2018 Photo by: Ron Gaunt / BCCI / SPORTZPICS

இந்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ரன்கள் குவிக்க முன்னாள் வீரர் சந்து போர்டு ஆலோசனை வழங்கியுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து சந்து போர்டு கூறுகையில் ‘‘முதல் விஷயம் ஆடுகளத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டும் என்பதுதான். இதுதான் முக்கியம். குறிப்பாக ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் பிட்ச் ஆகும் பந்தை லீவ் செய்ய வேண்டும். இந்தியாவின் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் விக்கெட் கீப்பரிடமும், ஸ்லிப் திசைகளிலும்தான் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்கள்.

Cricket – India v South Africa – First Test cricket match – Newlands Stadium, Cape Town, South Africa – January 8, 2018. India’s captain Virat Kohli looks on. REUTERS/Sumaya Hisham

ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் பிட்ச் ஆகும் பந்தை எதிர்கொள்வதில் பேட்ஸ்மேன்கள் தங்களது நுட்பத்திறனை மாற்றிக்கொள்ள வேண்டும். தொடக்கத்தில் பந்தை நன்றாக லீவ் செய்ய வேண்டும். ஆடுகளத்தில் நிலைத்து நின்ற பின்னர், பவுன்சர் மற்றும் வேகப்பந்தை விளாச முடியும்.

பேட்ஸ்மேன்கள் க்ரீஸ்க்குள் நின்று விளையாடுவதற்குப் பதிலாக, க்ரீஸை விட்டு சுமார் 6 இன்ஞ் வெளியில் நின்று பந்தை முன்னதாகவே சந்திக்க வேண்டும். பந்தை ஸ்விங் செய்ய அனுமதிக்கக்கூடாது.

Chandu Borde

இப்படி உங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்றால், பெரிய அளவில் கஷ்டப்பட வேண்டியதில்லை. உண்மையிலேயே முதல் டெஸ்ட் சிறப்பான ஆட்டம். அவர்கள் 2-வது இன்னிங்சில் 130 ரன்னில் சுருண்டதன் காரணமாக கலக்கம் இருக்கும். முதல் டெஸ்டில் இந்திய பேட்ஸமேன்கள் பெரிய அளவில் சாதிக்கவில்லை. ஆனால், 2-வது டெஸ்டில் மாறுபட்ட இந்திய அணியை உங்களால் பார்க்க முடியும்’’ என்றார். • SHARE
  Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

  விவரம் காண

  சர்வதேச டி.20 தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார் சாஹல் !!

  சர்வதேச டி.20 தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார் சாஹல் டி.20 அரங்கிற்கான ஐ.சி.சி.,யின் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 12வது...

  முத்தரப்பு தொடரின் இறுதி போட்டி.. கணிக்கப்பட்ட இரு அணிகளின் ஆடும் லெவன் !

  முத்தரப்பு தொடரின் இறுதி போட்டி.. கணிக்கப்பட்ட இரு அணிகளின் ஆடும் லெவன் இலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் இடையேயான...

  இறுதி போட்டியில் வெல்லப்போது யார்.. பழைய வரலாறுகள் சொல்வது என்ன..?

  இறுதி போட்டியில் வெல்லப்போது யார்.. பழைய வரலாறுகள் சொல்வது என்ன..? முத்தரப்பு டி.20 தொடரில் இறுதி போட்டிக்கு தகுதி  பெற்றுள்ள இந்தியா வங்கதேசம் இடையேயான...

  முத்தரப்பு தொடரில் முடி சூடப்போவது யார்…? நாளை இறுதி போட்டி !

  முத்தரப்பு தொடரில் முடி சூடப்போவது யார்...? நாளை இறுதி போட்டி முத்தரப்பு டி.20 தொடரில் இறுதி போட்டிக்கு தகுதி  பெற்றுள்ள இந்தியா வங்கதேசம் இடையேயான...

  இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மல்லுக்கட்ட போவது யார்..? முதலில் பேட்டிங் செய்கிறது இலங்கை !!

  இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மல்லுக்கட்ட போவது யார்..? முதலில் பேட்டிங் செய்கிறது இலங்கை முத்தரப்பு டி.20 தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய...