இந்த உலக கோப்பையில் ரோகித் சர்மாவிற்கு நான்கு முறை கேட்ச் விடப்பட்டது. அதை அனைத்தையும் சரியாக பயன்படுத்தி சதம், அரை சதம் என விளாசியிருக்கிறார் நம்ம ஹிட்மேன் ரோஹித் சர்மா.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்படுவதற்கு ஒரு காரணமாக இருப்பவர் ஹிட்மன் என அனைவராலும் அழைக்கப்படும் அதிரடி துவக்க வீரர் ரோகித் சர்மா.
ரோஹித் சர்மா இதுவரை ஆடிய 7 இன்னிங்ஸ்களில் 4 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். இவர் இதுவரை 544 ரன்கள் குவித்திருக்கிறார். இத்தகைய சிறப்பான செயலுக்கு பின்னர் சில மோசமான துவக்கமும், அதனை தவறவிட்ட எதிரணிக்கு பெரிய ஏமாற்றத்தையும் ரோகித் சர்மா கொடுத்திருக்கிறார்.
அதாவது, இந்த உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா அரைசதம் அல்லது சதம் அடித்திருக்கும் அனைத்து போட்டிகளிலும் ஒற்றை இலக்க ரன்களில் இருக்கும்பொழுது கேட்ச் வாய்ப்பை கொடுத்திருக்கிறார். அதனை எதிரணி வீரர்கள் தவறவிட்டுள்ளனர். அதன்பிறகு தான் ரோஹித் சர்மா மிகப்பெரிய ஸ்கோருக்கு சென்றிருக்கிறார்.
உதாரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் ரோஹித் சர்மா 4 ரன்கள் இருக்கையில் கொடுத்த கேட்சை ஜோ ரூட் தவறவிட்டார். அதன்பிறகு, ரோஹித் சதமடித்து அசத்தியதை நாம் காந்திருப்போம்.
இந்த உலககோப்பையில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை தவறவிட்ட தருணங்கள்
1. தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக 1 ரன் இருக்கையில் தவறவிட்டனர். அதே போட்டியில் 122 ரன்கள் அடித்தார்.
2. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2 ரன்கள் இருக்கையில் தவறவிட்டனர். அதே போட்டியில் 57 ரன்கள் அடித்தார்.
3. இங்கிலாந்துக்கு எதிராக 4 ரன்கள் இருக்கையில் தவறவிட்டனர். அதே போட்டியில் 101 ரன்கள் அடித்தார்.
4. வங்கதேச அணிக்கு எதிராக 9 ரன்கள் இருக்கையில் தவறவிட்டனர். 104 ரன்கள் அடித்தார்.