ஆஸ்திரேலிய மண்ணில் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் தனது மிக அதிகபட்ச ஸ்கோரையும் புஜாரா பதிவு செய்துள்ளார். வெளிநாடுகளில் புஜாராவின் அதிகபட்ச ஸ்கோர் 153 ரன்கள்தான். அதை இப்போது கடந்து 193 ரன்களைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த 3-வது வீரர் புஜாரா ஆவார். இதற்கு முன் ராகுல் டிராவிட் கடந்த 2003-04ம் ஆண்டிலும், 2014-15-ம் ஆண்டில் விராட் கோலியும் அந்தச் சாதனையை படைத்திருந்தனர்.

குறிப்பாக கடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் 1200 பந்துகளுக்கு மேல் சந்தித்துள்ளார் புஜாரா. இதற்கு முன் ராகுல் டிராவிட் 2003-04ம் ஆண்டில் 1203 பந்துகளைச் சந்தித்திருந்தார். அவருக்குப் பின் 2-வது வீரர் புஜாராசதமடித்து புஜாரா நிகழ்த்திய சாதனைகளின் பட்டியல்!! 1

* 5 மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடினார் புஜாரா. அவரால் சராசரியாக 14 ரன்களையே எடுக்கமுடிந்தது. இதன்பிறகு இங்கிலாந்தில் எட்பாஸ்டனில் அவர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இத்தனைக்கும் பிறகு மீண்டு வந்துள்ளார் புஜாரா. தன்னை இங்கிலாந்தில் நீக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகப் பந்துகளை எதிர்கொண்டவர் புஜாராதான்.

* எட்பாஸ்டன் டெஸ்டில் நீக்கப்பட்ட பிறகு புஜாரா எடுத்துள்ள ரன்கள்:

1, 17, 14, 72, 132*, 5, 37, 0, 86, 10 123, 71, 24, 4, 106, 0, 130*. இந்தக் காலகட்டத்தில் கோலியை விடவும் அதிக சதங்கள் மற்றும் சராசரியைக் கொண்டுள்ளார் புஜாரா.

* புஜாராவின் 18-வது சதம் இது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5-வது சதம். இந்தத் தொடரில் மட்டுமே 3 சதங்களை அடித்துள்ளார்.

* இன்றைய டெஸ்டில் முதல் 40 ரன்களை எடுக்க புஜாராவுக்கு 127 பந்துகள் தேவைப்பட்டன. மீதமுள்ள 90 ரன்களை எடுக்க அவருக்கு 123 பந்துகளே தேவைப்பட்டன. இந்தத் தொடரில் நான்காவது முறையாக 200 பந்துகளுக்கும் அதிகமாக எதிர்கொண்டுள்ளார்.

* ஆஸ்திரேலியாவில் அதிகப் பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர்கள்

டிராவிட் (2003-04) – 1203 பந்துகள்
ஹசாரே (1947-48) – 1192 பந்துகள்
புஜாரா (2018-19) – 1135 பந்துகள் (இதுவரை)
கோலி (2014-15) – 1093 பந்துகள்
கவாஸ்கர் (1977-78) – 1032 பந்துகள்சதமடித்து புஜாரா நிகழ்த்திய சாதனைகளின் பட்டியல்!! 2

* இந்தத் தொடரில் 1000-க்கும் அதிகமான பந்துகளை எதிர்கொண்டுள்ளார் புஜாரா. இதற்கு முன்பு ஒரு டெஸ்ட் தொடரில் அவர் ஆயிரம் பந்துகளை எதிர்கொண்டதும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான். பிப்ரவரி – மார்ச் 2017-ல் 4 டெஸ்டுகளில் 1049 பந்துகளை எதிர்கொண்டார்.

* இந்தத் தொடரில் இதுவரை 458 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார் புஜாரா. ஒரு டெஸ்ட் தொடரில் அவர் எடுத்த அதிக ரன்கள் இது. இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் 2012-13-ல் 438 ரன்கள் எடுத்தார். சதமடித்து புஜாரா நிகழ்த்திய சாதனைகளின் பட்டியல்!! 3

* ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் எடுத்த இந்திய வீரர்கள்

கோலி (2014-15) – 4
கவாஸ்கர் (1977-78) – 3
புஜாரா (2018-19) – 3

3-ம் நிலை வீரராக அதிக டெஸ்ட் சதங்கள்

37 – சங்கக்காரா
32 – பாண்டிங்
28 – டிராவிட்
25 – ஆம்லா
20 – பிராட்மேன்
17 – கேன் வில்லியம்சன்/புஜாரா (தொடக்க வீரராக மற்றொரு சதமடித்துள்ளார் புஜாரா) • SHARE

  விவரம் காண

  சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு !!

  சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின்...

  இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் !!

  இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் உலகத்தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக பந்து வீச்சில்...

  இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி !!

  இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி பாகிஸ்தானில் இந்த ஆண்டு செப்டம்பரில் நடக்கும் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி...

  அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு !!

  அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நாளை நடைபெற உள்ளது. விராட்கோலி...

  இந்திய அணியின் வெற்றி பயணம் தொடருமா..? நாளை இரண்டாவது டி.20 போட்டி !!

  விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டி தொடரில்...