இவருடைய ஆட்டம் பார்க்கவெ சூப்பர்...முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் புகழாரம்.. 1

ஹார்திக் பாண்டியாவின் ஆட்டம் பார்ப்பதற்க்கெ மிகவும் அழகாக உள்ளது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கெல் பெவான் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இவருடைய ஆட்டம் பார்க்கவெ சூப்பர்...முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் புகழாரம்.. 2

இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து, தொடரையும் இழந்துவிட்ட நிலையில் இரு அணிகள் இடையேயான அதிக முக்கியத்துவம் இல்லாத கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

துவக்க வீரராக களமிறங்கிய தவான் மற்றும் சுப்மன் கில் ஜோடி எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள் பின் களமிறங்கிய விராட் கோலி 78 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அணிக்கு ரன்களை சேர்த்தார்.எதிர்பாராதவிதமாக ஹஸல்வுட் வீசிய பந்தில் கேட்ச் என்ற முறையில் அவுட்டானார்.

இவருடைய ஆட்டம் பார்க்கவெ சூப்பர்...முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் புகழாரம்.. 3

பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இவருடைய ஆட்டம் பார்க்கவெ சூப்பர்...முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் புகழாரம்.. 4

பின் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரின் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது இதில் ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில் 92 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை இருந்தார் அதேபோன்று ரவீந்திர ஜடேஜா 50 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது.

இவருடைய ஆட்டம் பார்க்கவெ சூப்பர்...முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் புகழாரம்.. 5

இந்நிலையில் ஹார்திக் பாண்டியா பற்றி ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்-ரவுண்டர் மைக்கேல் பவன் கூறியதாவது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா மிக சிறப்பாக செயல்படுகிறார். பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் இவருடைய ஆட்டம் மிக சிறப்பாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக எவ்வாறு சிறப்பாக செயல்பட்டாரோ அதே போன்று இந்திய அணிக்கும் சிறப்பாக செயல்படுகிறார் இவருடைய ஒவ்வொரு ஷாட்களும் மிகத் துல்லியமாகவும் அபாரமாக இருக்கிறது என்று இவரைப் பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.

இவருடைய ஆட்டம் பார்க்கவெ சூப்பர்...முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் புகழாரம்.. 6

சிட்னியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் பாண்டியா 76 பந்துகளில் 90 ரன்கள் அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் பின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இவர் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை 31 பந்துகளுக்கு 28 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின் மீண்டு வந்த ஹார்திக் பாண்டியா இன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 76 பந்துகளில் 92* ரன்கள் எடுத்தார்.இதனால் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுக்க முடிந்தது.

இவருடைய ஆட்டம் பார்க்கவெ சூப்பர்...முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் புகழாரம்.. 7

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா மிக சிறப்பாக செயல்படுகிறார் இவரின் ஆட்டம் பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது என்று மைக்கேல் பெவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *