சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லை... பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுக்க போவது இந்த அணி தான்; ரவிச்சந்திர அஸ்வின் உறுதி !! 1
சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லை… பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுக்க போவது இந்த அணி தான்; ரவிச்சந்திர அஸ்வின் உறுதி

எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜாயிண்ட் அணி இந்த வீரரை தனது அணியில் இணைக்க கடுமையாக போட்டி போடும் என ரவிச்சந்திர அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து, உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.இதுவரை மொத்தம் 15 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. அடுத்த வருடத்திற்கான தொடர் வழக்கம் போல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை மட்டும் தக்க வைத்து கொண்டு, மற்ற வீரர்களை விடுவித்தன.

சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லை... பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுக்க போவது இந்த அணி தான்; ரவிச்சந்திர அஸ்வின் உறுதி !! 2

மேலும் தங்களது அணியில் எந்த வீரர்களெல்லாம் தேவைப்படுகிறார்களோ அவர்களையெல்லாம் தட்டி தூக்குவதற்கு பக்காவான ஸ்கெட்ச்சை ரெடி செய்து கொண்டுள்ளனர்.

இதனால் ஒவ்வொரு அணிக்கும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தகுந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். மேலும் எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான முழு ஏலம் குறித்தும், அதில் எந்த வீரர் அதிகப்படியான தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார் என்பது போன்ற கருத்தையும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் அனுபவ வீரர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான ரவிச்சந்திர அஸ்வின்., லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணி பென் ஸ்டோக்ஸை நிச்சயம் தனது அணியில் இணைப்பதற்கு அனைத்து வகையான திட்டத்தையும் தீட்டும் என தன்னுடைய யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லை... பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுக்க போவது இந்த அணி தான்; ரவிச்சந்திர அஸ்வின் உறுதி !! 3

இது குறித்து அஸ்வின் தெரிவித்ததாவது, “எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடருக்கன மினி ஏலத்தில், லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணி நிச்சயம் பென் ஸ்டோக்ஸை தனது அணியில் இணைக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை செய்யும், ஒருவேளை அவர் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே அடுத்த வீரர் தேர்வு செய்ய முயற்சிக்கும்” என தெரிவித்திருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லை... பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுக்க போவது இந்த அணி தான்; ரவிச்சந்திர அஸ்வின் உறுதி !! 4

“அதேபோன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சாம் கரனை தனது அணியில் இணைக்க முயற்சி செய்யும், ஒருவேளை அவர் கிடைக்கவில்லை என்றால் பென் ஸ்டோக்ஸை அணியில் இணைக்க முயற்சி செய்யும் பென் ஸ்டோக்சும் கிடைக்கவில்லை என்றால் கேமரூன் கிரீனை தனது அணியில் இணைப்பதற்கு வாய்ப்பு உள்ளது என அஸ்வின் தெரிவித்திருந்தார்.

இதில் சாம்கரன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இரு வீரர்களும் 2022 ஐபிஎல் தொடரில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *