முட்டாள்தனம்... ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவிக்கு சரிப்பட்டு வருவாரா..? கவுதம் கம்பீர் கடும் காட்டம் !! 1
முட்டாள்தனம்… ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவிக்கு சரிப்பட்டு வருவாரா..? கவுதம் கம்பீர் கடும் காட்டம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் யுஸ்வேந்திர சாஹலை சரியாக பயன்படுத்ததாக ஹர்திக் பாண்டியாவின் முடிவை முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது டி.20 போட்டி லக்னோவில் நடைபெற்றது.

முட்டாள்தனம்... ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவிக்கு சரிப்பட்டு வருவாரா..? கவுதம் கம்பீர் கடும் காட்டம் !! 2

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்பின் 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணியும், பேட்டிங்கில் கடுமயாக திணறி, கடும் முயற்சிக்கு பிறகு கடைசி நேரத்தில் வெற்றி பெற்றது.

முட்டாள்தனம்... ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவிக்கு சரிப்பட்டு வருவாரா..? கவுதம் கம்பீர் கடும் காட்டம் !! 3

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், இரு அணிகளுமே 100 ரன்கள் எடுப்பதற்கு மிக கடுமையாக திணறியது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. ஆடுகளத்தின் தன்மையை இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உள்பட பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே போல் முன்னாள் வீரர்கள் பலரும் இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி.20 போட்டி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி.20 போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர், யுஸ்வேந்திர சாஹலை இரண்டாவது போட்டியில் சரியாக பயன்படுத்தாக ஹர்திக் பாண்டியாவின் முடிவை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

முட்டாள்தனம்... ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவிக்கு சரிப்பட்டு வருவாரா..? கவுதம் கம்பீர் கடும் காட்டம் !! 4

இது குறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், “யுஸ்வேந்திர சாஹலை சரியாக பயன்படுத்தாதது ஏன் என இப்பொழுதும் எனக்கும் புரியவில்லை. இதற்கு என்ன பதில் சொல்வது என்று கூட எனக்கு தெரியவில்லை. ஆடுகளத்தின் தன்மை சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்த போதிலும், ஹர்திக் பாண்டியா யுஸ்வேந்திர சாஹலை சரியாக பயன்படுத்தாமல் தீபக் ஹூடாவிற்கு 4 ஓவர்கள் கொடுத்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது தவறான முடிவு. அர்ஸ்தீப் சிங், சிவம் மாவி போன்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆனால் ஆடுகளத்தின் தன்மை சூழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்த போது, யுஸ்வேந்திர சாஹல் போன்ற ஒருவரை சரியாக பயன்படுத்தாது ஏற்புடையது அல்ல” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *