மணிஷ் பாண்டேவிற்கு மல்லுக்கட்டிய பஞ்சாப்… 11 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது ஹைதரபாத் !! 1

மணிஷ் பாண்டேவிற்கு மல்லுக்கட்டிய பஞ்சாப்… 11 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது ஹைதரபாத்

இளம் வீரர் மணிஷ் பாண்டேவை 11 கோடி ரூபாய் கொடுத்து சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.

மணிஷ் பாண்டேவிற்கு மல்லுக்கட்டிய பஞ்சாப்… 11 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது ஹைதரபாத் !! 2

இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ள நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில்  இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

மணிஷ் பாண்டேவிற்கு மல்லுக்கட்டிய பஞ்சாப்… 11 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது ஹைதரபாத் !! 3

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த மணிஷ் பாண்டேவை நீண்ட நேர போட்டிக்கு பின் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 11 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. இவரை ஏலத்தில் எடுக்க ஹைதரபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே கடும் நீண்ட நேரம் கடும் போட்டி நிலவியது.

தனக்கான அடிப்படை விலையாக 1 கோடி ரூபாயை நிர்ணயம் செய்திருந்த இவரை 11 கோடி ரூபாய் கொடுத்து ஹைதரபாத் அணி ஏலத்தில் எடுத்திருப்பது ரசிகர்கள் இடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *