முக்கித் திணறி ஒருவழியா டீசன்டான ஸ்கோரை குவித்த ராஜஸ்தான் அணி ! 4வது வெற்றியை பதிவு செய்யுமா ஆர்சிபி ? 1

முக்கித் திணறி ஒருவழியா டீசன்டான ஸ்கோரை குவித்த ராஜஸ்தான் ! 4வது வெற்றியை பதிவு செய்யுமா ஆர்சிபி ?

14வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 15 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. 

இன்று(ஏப்.22) நடைபெறும் 16வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணியும் மோதுகிறது. இந்த போட்டி மாலை 7.30 மணியளவில் மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.

முக்கித் திணறி ஒருவழியா டீசன்டான ஸ்கோரை குவித்த ராஜஸ்தான் அணி ! 4வது வெற்றியை பதிவு செய்யுமா ஆர்சிபி ? 2

இந்த போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி மைதானத்தின் நிலைமையை அறிந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது.

பவர்ளே முடிவில் 32 ரன்களை குவித்து 3 விக்கெட்களை இழந்தது ராஜஸ்தான் அணி. தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் 8, மனன் வோஹ்ரா 7, டேவிட் மில்லர் 0 என பவர்ளேவில் விக்கெட் இழந்தனர். இதன்பிறகு ஜோடி களமிறங்கிய சஞ்சு சாம்சன் 21 ரன்னில் வெளியேறினார்.

முக்கித் திணறி ஒருவழியா டீசன்டான ஸ்கோரை குவித்த ராஜஸ்தான் அணி ! 4வது வெற்றியை பதிவு செய்யுமா ஆர்சிபி ? 3

இதன்பிறகு களமிறங்கிய சிவம் டூபே 46 ரன்கள், ரியான் பராக் 25 ரன்கள், ராகுல் திவாட்டியா 40 ரன்கள், மோரிஸ் 10 ரன்கள் என இவர்கள் அதிரிடியாக விளையாடியதால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 177 ரன்கள் குவித்தனர். பவர்பிளேவில் சிறப்பாக பந்தவீசிய ஆர்சிபி பவுலர்கள், இதன்பிறகு விக்கெட்கள் எடுத்தாலும் ரன்கள் வாரி கொடுத்திருக்கிறார்கள்.

ஆர்சிபி பவுலர் முகமது சிராஜ் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்களை எடுத்து அசத்தியிருக்கிறார். இதையடுத்து ஹர்ஷல் பட்டேல் 4 ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார். தற்போது பெங்களூர் அணி 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்கிறது.து இடத்தில் இருக்கிறது.

முக்கித் திணறி ஒருவழியா டீசன்டான ஸ்கோரை குவித்த ராஜஸ்தான் அணி ! 4வது வெற்றியை பதிவு செய்யுமா ஆர்சிபி ? 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *