இந்திய அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு! அணியில் 2 மாற்றங்கள்!

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பர்மிங்காமில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.

இந்திய அணி 7 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 11 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காமல் இருந்த இந்திய அணி இதே ஆடுகளத்தில் (பர்மிங்காம்) நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்து முதல் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா சதம் அடித்தார். விராட்கோலி அரை சதத்தை கடந்தார். இருவரும் நல்ல பார்மில் நீடிக்கின்றனர். லோகேஷ் ராகுல் ஏமாற்றம் அளித்தார். டோனி, கேதர் ஜாதவ் அதிரடியாக ஆட முடியாமல் அதிர்ச்சி அளித்தனர்.

சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் பந்து வீச்சை இங்கிலாந்து வீரர்கள் வெளுத்து வாங்கினார்கள். இதனால் இந்த ஆட்டத்தில் வீரர்கள் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுஸ்வேந்திர சாஹல், கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக், சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.

 

ரவீந்திர ஜடேஜா சேர்ப்பு?: ஜாதவுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படலாம். அவரது பேட்டிங், இடதுகை சுழற்பந்துவீச்சு, சிறப்பான பீல்டிங் கண்டிப்பாக அணிக்கு பலத்தை தரும், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஒருபக்கம் பவுண்டரி அடிக்கும் தூரம் 60 மீட்டருக்கு குறைவாக உள்ளதால், ஜடேஜா சேர்க்கப்படுவது பலனை தரும். இதை பயன்படுத்தி தான் பேர்ஸ்டோ, ஜேஸன் ராய், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இந்திய பந்துவீச்சை பவுண்டரிகளாக மாற்றினர்.

வங்காளதேச அணி 3 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 7 புள்ளிகள் பெற்றுள்ளது. எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் வங்காளதேச அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும். எனவே அந்த அணிக்கு இந்த ஆட்டம் வாழ்வா-சாவா? ஆட்டமாகும். இதில் தோற்றால் அந்த அணி அரைஇறுதி வாய்ப்பை இழந்து விடும்.

வங்காளதேச அணியில் ஷகிப் அல்-ஹசன் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கலக்கி வருகிறார். 2 சதம் 3 அரைசதம் உள்பட 476 ரன்கள் குவித்து இருக்கும் அவர் 10 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார். முஷ்பிகுர் ரஹிம், தமிம் இக்பால் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது சைபுதீன், முஸ்தாபிஜூர் ரகுமான் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்து விடும் என்பதால் தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தி விளையாடும். அதேநேரத்தில் அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்பதால் வங்காளதேச அணி கடுமையாக போராடும். மழையால் பாதிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ள இந்த போட்டியில் ரன் குவிப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

 

இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பட்டியல் வருமாறு:-

 

  1. லோகேஷ் ராகுல்
  2. ரோகித் சர்மா
  3. விராட்கோலி (கேப்டன்)
  4. ரிஷாப் பண்ட்
  5. ஹர்திக் பாண்ட்யா
  6. டோனி
  7. தினேஷ் கார்த்திக்
  8. ரவீந்திர ஜடேஜா
  9. குல்தீப் யாதவ்
  10. முகமது ஷமி
  11. பும்ரா

Sathish Kumar:

This website uses cookies.