இந்தியா - வங்கதேசம்: எங்கே? எத்தனை மணிக்கு? பேட்டிங் பிட்சா? வெற்றி நிலவரம் யாருக்கு? புள்ளி விவரம்! 1

இந்தப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்யும் முனைப்பில் உள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. 7 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியுடன் சேர்த்து இந்திய அணிக்கு இன்னும் இரண்டுப் போட்டிகள் எஞ்சியுள்ளன.

ஒருவேளை இந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தால், அரையிறுதி வாய்ப்புக்காக மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்படலாம். 7 போட்டிகளில் விளையாடியுள்ள வங்கதேச அணி, 7 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலின் ஆறாவது இடத்தில் உள்ளது. அரையிறுதி வாய்ப்பைத் தக்க வைக்க வேண்டுமானால், இந்தப் போட்டியுடன் சேர்த்து, பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது வங்கதேசம். இது மட்டுமின்றி செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்து வீழ்த்தியாக வேண்டும்.

இந்தியா - வங்கதேசம்: எங்கே? எத்தனை மணிக்கு? பேட்டிங் பிட்சா? வெற்றி நிலவரம் யாருக்கு? புள்ளி விவரம்! 2

அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பலவீனமாக இருப்பது, இந்திய அணி நிர்வாகத்திற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. மிடில் ஆர்டரில் தொடர்ந்து சொதப்பி வரும் கேதார் ஜாதவிற்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பெறலாம். மந்தமான பேட்டிங் காரணமாக விமர்சிக்கப்பட்டு வரும் மகேந்திர சிங் தோனி, தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியில் ரன்களை வாரி இறைத்த சாஹல்- குல்தீப் சுழல் கூட்டணி ஃபார்முக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வங்கதேசத்தைப் பொறுத்தவரை பேட்டிங் பௌளிங் என்று அனைத்து துறைகளிலும் அந்த அணி, ஆல்ரவுண்டர் சகிப் அல் ஹாசனையே நம்பியுள்ளது இதுவரை 476 ரன்களையும், 10 விக்கெட்டுகளையும் குவித்துள்ளார் சகிப் அல் ஹாசன்.

வங்கதேசம் அணி இதுவரை 7 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வி 7 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அணிக்கு எதிரான இந்த ஆட்டத்திலும், அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் வென்றால் அரையிறுதிக்கு வாய்ப்பு உண்டு.

இந்தியா - வங்கதேசம்: எங்கே? எத்தனை மணிக்கு? பேட்டிங் பிட்சா? வெற்றி நிலவரம் யாருக்கு? புள்ளி விவரம்! 3

ஆனால், இங்கிலாந்து அணி, நியூஸிலாந்து அணியிடம் தோற்றால் மட்டுமே வங்கதேசம் அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்பு உண்டு.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய அதை எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில்தான் போட்டி நடக்கிறது. இந்த ஆட்டத்தில் லெக்சைடில் தூரம் குறைவாக இருந்ததால்தான் இங்கிலாந்து வீரர்கள் அதிகமான ரன்கள் அடித்தனர் என்று கோலி புகார் அளித்தார். ஆதலால், நாளைய ஆட்டத்தில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் லெக் திசையில் கவனம் செலுத்தாமல், ஆஃப் சைடில் அதிகமான கவனம் செலுத்துவது அவசியம்.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்குத் தொடங்குகிறது.

 

முஸ்டாஃபிசூர் ரஹ்மானின் இடக்கை வேகப்பந்து வீச்சு, ஹிட்மேன் ரோஹித் ஷர்மாவிற்கு சவாலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஃபார்ம் மற்றும் கடந்த கால வரலாறு இரண்டுமே சாதகமாக இருப்பதால், இந்திய அணி எளிதாக வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெறுமென்பதே தற்போதைய நிலவரமாக உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *