இந்திய அணிக்கு சப்போர்ட் செய்யும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ! ரசிகர்கள் சந்தோசம் ! 1

இந்தியா மற்றும் இங்கிலாந்து  இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக  நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் வெறும் 112 ரன்கள் மட்டுமே குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 145 ரன்கள் குவித்து 33 ரன்கள் மட்டுமே முன்னிலை வகித்தது.

சிஎஸ்கே வீரர்களால் ஏற்பட்ட குழப்பம் ! என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் இங்கிலாந்து அணி ! 2

இதன் பிறகு இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிஸ்சில் 81 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் இந்திய அணி வெற்றி பெற 47 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதில்  இந்திய அணி 7.4  ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

இதன் மூலம் இந்திய அணி 2 – 1 என்று முன்னிலை வைத்திருக்கிறது. இந்த போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் ஸ்பின் பவுலர்களான அக்சர் பட்டேல் 11 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்களையும் பார்ட் டைம் பவுலரான ஜோ ரூட் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கின்றனர்.  

அகமதாபாத் பிட்ச் குறித்து பேசிய விராட் கோலியை தாக்கும் முன்னாள் வீரர்கள் ! 3

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டே நாளில் முடிவடைந்துள்ளதாலும் பேட்ஸ்மன்கள் பேட்டிங்கில் திணறியதாலும் பல்வேறு விமர்சனங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து முன்னாள் வீரர்கள், வல்லுநர்கள் என அனைவரும் கருத்து தெறிவித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து அணி தோல்வி அடைந்ததற்கு பிட்ச் தான் முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் பீட்ச் குறித்து அனைவரும் விவாதித்து வரும் நிலையில் மேத்யூ ஹைடன் மட்டும் இந்திய அணி சார்பாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணிக்கு சப்போர்ட் செய்யும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ! ரசிகர்கள் சந்தோசம் ! 2

இது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பேசுகையில் “ அகமதாபாத் பிட்சில் எனக்கு எந்த ஒரு குறைபாடும் தெரியவில்லை. அனைத்து அணிகளும் உள்நாடு மற்றும் வெளிநாடு என இரண்டு மைதானங்களில் சூழ்நிலைக்கேற்ப விளையாட வேண்டும். இந்தப் பிட்சில் பந்துகள் பெரிய அளவில் திரும்பவில்லை.  இதுபோன்ற பிட்சுகளில் அதிகமாக ஸ்வீப் ஷாட்கள் தான் விளையாட வேண்டும்.  அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேலின் பந்துகளை கவனித்து விளையாடவில்லை என்றால் கண்டிப்பாக விக்கெட்கள் விழ தான் செய்யும்” என்று கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *