Cricket, India, Harbhajan Singh, Ravichandran Ashwin, Mathew Hayden

அடுத்த வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கு ஒரு அணி ரீட்னசன் பாலிசி மற்றும் ரைட் டு மேட்ச் கார்ட்ஸ் மூலம் 5 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என டிசம்பர் 6ஆம் தேதி ஐபில் கவுன்சில் கூறியது.

ஒரு அணி அதிகபட்சமாக ஐந்து வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம். அதே போல் ரீட்னசன் பாலிசி மூலம் அதிகமாக மூன்று வீரர்களும் மற்றும் ரைட் டு மேட்ச் கார்ட்ஸ் மூலம் அதிக பட்சமாக மூன்று வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என தகவல் வந்துள்ளது.

இரண்டு வருடம் தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கு வருவதால், அந்த அணிகள் எப்படி ரீட்னசன் செய்வார்கள் என குழப்பம் நிலவியது. இதற்கும் ஐபில் கவுன்சில் முடிவு எடுத்தது.

Chennai Super Kings, Matthew Hayden, Indian Premier League, Retention Policy, Player Retentions, Irfan Pathan
Matthew Hayden and Dhoni recently met in Chennai for the Kings during a jersey launch. Photo Credit: Getty Images.

இரண்டு வருடம் கழித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், 2015ஆம் ஆண்டு வைத்து கொண்டிருந்த வீரர்கள் யார் யார் புனே மற்றும் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார்களோ அவர்களில் இருந்து வீரர்களை தேர்வு செய்து தக்கவைத்து கொள்ளலாம் என ஐபில் கவுன்சில் முடிவெடுத்தது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் மன்ற பக்கத்தில் தோனி – ரெய்னா ஆகியோர் வேட்டியில் இருப்பது போல் போட்டோவை பதிவு செய்து, இவர்கள் தேர்தலில் போட்டி இடுபவர்கள் இல்லை, சென்னை அணி தக்கவைத்து கொள்பவர்கள் என பதிவிட்டிருந்தது.

Chennai Super Kings, Matthew Hayden, Indian Premier League, Retention Policy, Player Retentions, Irfan Pathan
Matthew Hayden played a significant role for Chennai Super Kings during his stint with the outfit. Photo Credit: IPL.

அந்த பதிவிற்கு “நானும் இருக்கிறேன்” என மேத்யூ ஹேடன் பதில் அளித்தார். ஹேடன் செய்த ட்வீட்டிற்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் இர்பான் பதானும் பதில் அளித்தார். அந்த ட்வீட்களை பாருங்கள்:

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *