சும்மா எதாவது பேசாதீங்க பாண்டிங்... சூர்யகுமார் யாதவ் டிவில்லியர்ஸ் அளவுக்கு ஒர்த் கிடையாது; முன்னாள் பாகிஸ்தான் வீரர் அதிரடி பேச்சு !! 1

இந்திய அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவை, டிவில்லியர்ஸுடன் ஒப்பிட்டு ரிக்கி பாண்டிங் பேசிய ஏற்புடையது அல்ல என முன்னாள் பாகிஸ்தான் வீரரான சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

பல வருடமாக தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடியதன் மூலம், கடந்த வருடம் இந்திய அணியிலும் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ், தனது நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் வெகு விரைவாகவே இந்திய அணியில் தனக்கான இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டார்.

சும்மா எதாவது பேசாதீங்க பாண்டிங்... சூர்யகுமார் யாதவ் டிவில்லியர்ஸ் அளவுக்கு ஒர்த் கிடையாது; முன்னாள் பாகிஸ்தான் வீரர் அதிரடி பேச்சு !! 2

இந்திய அணிக்கான தனது பங்களிப்பை குறையே சொல்ல முடியாத அளவிற்கு செய்து கொடுத்து வரும் சூர்யகுமார் யாதவ், விண்டீஸ் அணிக்கு எதிரான நடப்பு டி.20 தொடரில் துவக்க வீரராக களமிறங்கி வருகிறார். மிடில் ஆர்டரில் களமிறங்குபவரான சூர்யகுமார் யாதவிற்கு, துவக்க வீரராக களமிறங்குவது செட்டாகது இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையையே அழித்துவிடும் என முன்னாள் வீரர்கள் பலர் பேசிய நிலையில், சூர்யகுமார் யாதவோ மூன்றாவது போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார்.

பல வருடமாக இந்திய அணியில் நிலவி வந்த மிடில் ஆர்டர் பிரச்சனை, சூர்யகுமார் யாதவ் மூலம் ஓரளவிற்கு சரியாகி உள்ளதால், ஆசிய கோப்பை மற்றும் டி.20 உலகக்கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவின் பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என கருதப்படுகிறது. தற்போதைய இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராக சூர்யகுமார் யாதவ் கருதப்படுவதால் அவரை பற்றி முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்துக்களை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர், அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யகுமார் யாதவ் பற்றி பேசியிருந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ரிக்கி பாண்டிங், சூர்யகுமார் யாதவை, டிவில்லியர்ஸுடன் ஒப்பிட்டு பாராட்டியிருந்தார்.

இந்தநிலையில், சூர்யகுமார் யாதவை டிவில்லியர்ஸுடன் ஒப்பிட்டு பேசிய ரிக்கி பாண்டிங்கின் கருத்து தவறானது என முன்னாள் பாகிஸ்தான் வீரரான சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

சும்மா எதாவது பேசாதீங்க பாண்டிங்... சூர்யகுமார் யாதவ் டிவில்லியர்ஸ் அளவுக்கு ஒர்த் கிடையாது; முன்னாள் பாகிஸ்தான் வீரர் அதிரடி பேச்சு !! 3

இது குறித்து சல்மான் பட் பேசுகையில், “சமகால கிரிக்கெட்டில் டிவில்லியர்ஸின் அருகில் கூட யாராலும் நெருங்க முடியாது என்றே கருதுகிறேன். டிவில்லியர்ஸை போன்று விளையாடுபவர்கள் எந்த அணியிலுமே இல்லை என்பதே எனத்ஹு கருத்து. அவரது ஆட்டம் தனித்துவமானது, அவரது விக்கெட்டை எடுக்காவிட்டால் எதிரணிகளுக்கு கடைசி பந்து வரையிலும் பிரச்சனை தான். அவரது விக்கெட்டை விரைவாக எடுத்தால் மட்டுமே எதிரணிகளால் அந்த போட்டியில் வெற்றி பெற முடியும். இப்படிப்பட்ட டிவில்லியர்ஸுடன், ரிக்கி பாண்டிங் எதற்காக சூர்யகுமார் யாதவை ஒப்பிட்டு பேசினார் என எனக்கு புரியவில்லை. சூர்யகுமார் யாதவ் மிக சிறந்த வீரர் என்பதிலும், அவர் தொடர்ந்து பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை. ஆனால் டிவில்லியர்ஸுடன் ஒப்பிட்டு பேசுவதை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சூர்யகுமார் யாதவ் மிக குறைவான சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார், உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களை அவர் இதுவரை எதிர்கொண்டது இல்லை. டிவில்லியர்ஸிற்கு பதிலாக விவி ரிச்சர்ட்ஸுடன், சூர்யகுமார் யாதவை ஒப்பிட்டு பேசியிருந்தால் கூட அது ஏற்புடையதாக இருந்திருக்கும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.