இந்த பையன டீம்ல எடுக்காதீங்க... அது தான் நமக்கு நல்லது; இந்திய அணியை எச்சரித்த முன்னாள் வீரர் !! 1
இந்த பையன டீம்ல எடுக்காதீங்க… அது தான் நமக்கு நல்லது; இந்திய அணியை எச்சரித்த முன்னாள் வீரர்

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியில் சுப்மன் கில்லிற்கு பதிலாக ப்ரித்வி ஷா சேர்க்கப்பட வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி அஹமதாபாத்தில் நடைபெறுகிறது.

இந்த பையன டீம்ல எடுக்காதீங்க... அது தான் நமக்கு நல்லது; இந்திய அணியை எச்சரித்த முன்னாள் வீரர் !! 2

நடப்பு டி.20 தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும், சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இந்த போட்டி மீது மிக அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருவதால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனையும் வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், இந்தியா நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி.20 போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர், மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியில் சுப்மன் கில்லிற்கு பதிலாக பிரித்வி ஷா சேர்க்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த பையன டீம்ல எடுக்காதீங்க... அது தான் நமக்கு நல்லது; இந்திய அணியை எச்சரித்த முன்னாள் வீரர் !! 3

இது குறித்து வாசிம் ஜாபர் பேசுகையில், “மூன்றாவது போட்டிக்கான ஆடும் லெவனில் மாற்றம் செய்ய வேண்டும் என இந்திய அணி நினைத்தால், முதலில் சுப்மன் கில்லை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ப்ரித்வி ஷாவிற்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்க வேண்டும். ப்ரித்வி ஷா சிறப்பான பார்மில் உள்ளார், அவருக்கு இடம் கொடுப்பது இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு நிச்சயம் வலு சேர்க்கும். இஷான் கிஷன், ராகுல் திரிபாதி போன்ற வீரர்களை அணியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *