ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் !! 1

ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ்

ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெறாமல் இந்த ஆண்டு நிறைவடைவதை தன்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் தொடர் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் நடத்தப்பட இருந்த நிலையில் கொரோனாவின் கோர தாண்டவம் காரணமாக கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் டி.20 தொடர் நடக்குமா இல்லையா என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் !! 2

ஐ.பி.எல் தொடரை நடத்தமால் விட்டுவிட்டால் ஏறத்தாழ 4000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் ஐ.பி.எல் தொடரை ரத்து செய்ய வும் முடியாமல் நடத்தவும் முடியாமல் பி.சி.சி.ஐ., திண்டாடி வருகிறது. அதே போல் மறுபுறம் டி.20 உலகக்கோப்பைக்கான தேதியும் நெருங்கி வருவதால் பி.சி.சி.ஐ., செய்வதறியாமல் திணறி வருகிறது.

இந்தநிலையில், ஐ.பி.எல் டி.20 தொடர் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ், ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெறாமல் இந்த ஆண்டு நிறைவடைவதை தன்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் !! 3

இது குறித்து ஜாண்டி ரோட்ஸ் கூறியதாவது;

ஐபிஎல் போட்டி இல்லாமல் இந்த வருடம் கடந்து போவதை நினைக்க மிகவும் கஷ்டமாக இருக்கும். 2008-ல் இருந்து கிரிக்கெட் அட்டவணையில் இது ஒரு அங்கமாக உள்ளது. மிகப்பெரிய தொடக்க ஆண்டில் இருந்து, ஒவ்வொரு வருடமும் போட்டியை சிறப்பாக நடத்த பிசிசிஐ முயற்சி செய்து வருகிறது.

ஐபிஎல் போட்டி நிதி மற்றும் எதிர்கால கிரிக்கெட் வீரர்களுக்கும் மிக முக்கியமானதாக இருக்கிறது. உலகின் சிறந்த வீரர்கள் இந்தத் தொடரில் விளையாடுகிறார்கள். அதனால் ஐபிஎல் இல்லாமல் செல்வதை நினைத்து பார்ப்பது கடினம். என்னைப் பொறுத்த வரைக்கும் ஐபிஎல் இல்லாத கிரிக்கெட் அட்டவணை அர்த்தமற்றது’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *