சென்னை மைதானம் மும்பைக்கு அட்வான்டேஜாக இருக்கும் ! அத சமாளிக்க இதுதான் வழி ! – தவான் ஓப்பன்டாக்

14வது ஐபிஎல் சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 12 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிட்டத்தில் இருக்கிறது. இதையடுத்து இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இருக்கிறது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு தொந்தரவு கொடுக்க போகும் மும்பை படை இதுதான் ! 2

இன்று (ஏப்.20) நடைபெறும் 13வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் 16 போட்டிகளிலும், டெல்லி கேப்பிடல்ஸ் 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மைதானம் மும்பைக்கு அட்வான்டேஜாக இருக்கும் ! அத சமாளிக்க இதுதான் வழி ! - தவான் ஓப்பன்டாக் 2

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் இந்த சீசனில் சிறந்த பார்மில் இருக்கிறார். சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் 85 ரன்களும், எதிரான போட்டியில் 92 ரன்களும் அடித்து தனது அணிக்கு வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார். இதன்மூலம் இவர் ஆரஞ்ச் கேப்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில், மும்பைக்கு எதிரான இன்றைய போட்டி குறித்து தவான் பேசியிருக்கிறார். தவான் கூறுகையில் “மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை மைதானத்தில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி இருப்பதால் அவர்களுக்கு பிட்ச் குறித்து நங்கு அறிந்திருக்கும். எங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு விக்கெட்டுக்கு ஏற்ப திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஒரு நேர்மறையான மனநிலையுடன் விளையாட வேண்டும். மேலும், இந்த போட்டியை வெல்ல வேண்டும்” என்று பேசியிருக்கிறார் தவான்.

சென்னை மைதானம் மும்பைக்கு அட்வான்டேஜாக இருக்கும் ! அத சமாளிக்க இதுதான் வழி ! - தவான் ஓப்பன்டாக் 3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *