எத பத்தியும் பெருசா கவலை இல்ல... மீண்டும் பழைய ஆட்டத்திற்கு திரும்புவேன்; வெங்கடேஷ் ஐயர் உறுதி !! 1

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் என்னால் சிறப்பாக செயல்பட முடிந்ததற்கு இதுதான் காரணம் என்று வெங்கடேஷ் ஐயர் விவரித்துள்ளார்.

15வது ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

எத பத்தியும் பெருசா கவலை இல்ல... மீண்டும் பழைய ஆட்டத்திற்கு திரும்புவேன்; வெங்கடேஷ் ஐயர் உறுதி !! 2


இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 43 ரன்கள் எடுத்தனர்.


இதன்பின் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை அணிக்கு, அந்த அணியின் கேப்டனும், துவக்க வீரருமான ரோஹித் சர்மா 2 ரன்னில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான இஷான் கிஷன் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 51 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இதன்பின் களமிறங்கிய வீரர்களில் ரமன்தீப் சிங் (12), டிம் டேவிட் (13) மற்றும் பொலார்ட் (13) ஆகிய மூன்று வீரர்களை தவிர மற்றவர்கள், ஒற்றை இலக்கை ரன்னை கூட தாண்டாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 17.3 ஓவரில் 113 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.


கொல்கத்தா அணி சார்பில் அதிகபட்சமாக பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ரசல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

எத பத்தியும் பெருசா கவலை இல்ல... மீண்டும் பழைய ஆட்டத்திற்கு திரும்புவேன்; வெங்கடேஷ் ஐயர் உறுதி !! 3

இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு பேசிய கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர்,நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கான சீக்ரட் குறித்து விவரித்துள்ளார்.

அதில் ,“நான் மைதானத்தில் சென்று ஜாலியாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன்,சிறப்பாக செயல்படாமல் தவித்தது மிகவும் கடினமாக இருந்தது,அதனால் நான் போட்டி முடிவை பற்றி கவலைபடாமல் என்னுடைய ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன்,என்னால் மற்றவர்களை கட்டுபடுத்த முடியாது(பந்தின் தன்மை,விக்கெட்) ஆனால் என்னால் என்னுடைய முறையை மாற்ற முடியும்,அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன் என்று வெங்கடேஷ் ஐயர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.