இஷான் கிஷன் இல்லை.... அடுத்த 10 வருசத்துக்கு மும்பை இந்தியன்ஸின் ஹீரோ இவர் தான்; இர்பான் பதான் உறுதி !! 1

மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த இரண்டு இளம் வீரர்களும் அடுத்த பத்து வருட மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.மொத்தம் 70 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 52 போட்டிகள் நிறைவடைந்துவிட்டது. ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால், ஒவ்வொரு அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக கடுமையாக போராடி வருகின்றன.

இஷான் கிஷன் இல்லை.... அடுத்த 10 வருசத்துக்கு மும்பை இந்தியன்ஸின் ஹீரோ இவர் தான்; இர்பான் பதான் உறுதி !! 2

நாளுக்கு நாள் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இளம் வீரர்கள் பலர் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சீனியர் வீரர்களை விட இளம் வீரர்கள் பலரே இந்த தொடரில் தங்களது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தங்களது அணியின் வெற்றிக்கும் காரணமாக திகழ்ந்து வருகின்றனர். இதன் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் வெளிச்சத்தையும் பெற்று வரும் இளம் வீரர்களை, முன்னாள் வீரர்கள் பலரும் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.

அந்தவகையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் நட்சத்திர வீரர்கள் திலக் வர்மா குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பாராட்டிப் பேசியுள்ளார்.

இஷான் கிஷன் இல்லை.... அடுத்த 10 வருசத்துக்கு மும்பை இந்தியன்ஸின் ஹீரோ இவர் தான்; இர்பான் பதான் உறுதி !! 3

திலக் வர்மா குறித்து இர்பான் பதான் பேசுகையில்,“எப்போதெல்லாம் ஒரு இளம் வீரர் சிறப்பாக செயல்படுகிறாரோ அப்போதெல்லாம் அவர் அணிக்கு ஒரு நல்ல நிலமையை ஏற்படுத்தி கொடுக்கிறார், மேலும் இதனால் அந்த இளம் வீரருக்கும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும், இதே போன்ற ஒன்றை தான் நாம் மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் திலக் வர்மாவிடம் காண்கிறோம், திலக் வருமா மிகவும் திறமையான இடதுகை பேட்ஸ்மேன், கிரிக்கெட்டில் இவருடைய மதிப்பு தங்கத்திற்கு நிகரானது, அனைத்து அணிகளும் இடது கை பேட்ஸ்மேன்களை தனது அணியில் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும், ஏனென்றால் அவர்களால் சுழற்பந்து வீச்சாளர்களை எளிதாக கையாள முடியும் அவர்களுக்கு இயற்கையாகவே இடதுகை பந்துவீச்சாளர்களை சமாளிக்கக்கூடிய ஆங்கிள் அமைந்துள்ளது, இந்த இளம் ஹீரோ நிச்சயம் மிகப் பெரும் சூப்பர் ஹீரோவாக உருவெடுத்தார் மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக திலக் வர்மா இன்னும் 10 வருடங்கள் விளையாடுவார் என்று திலக் வர்நாவை இர்பான் பதான் பாராட்டு பேசியுள்ளார்

 

Leave a comment

Your email address will not be published.