உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் இவர் தான்; முன்னாள் வீரர் கிளார்க் புகழாரம் !! 1
Australia's Michael Clarke yells as he runs down the wicket while batting against Sri Lanka during their Cricket World Cup Pool A match in Sydney, Australia, Sunday, March 8, 2015. (AP Photo/Rob Griffith)

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் இவர் தான்; முன்னாள் வீரர் கிளார்க் புகழாரம்

சமகால கிரிக்கெட் உலகில் மூன்று விதமான போட்டிகளிலும் சிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோஹ்லியை, முன்னாள் வீரர் மைக்கெல் கிளார்க் தேர்வு செய்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கும் நிலையில் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடிவருகின்றனர் அல்லது சுவாரஸ்யமான தகவல்களை ஊடகங்களுக்கு பகிர்ந்து, அதன்மூலம் ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்துவருகின்றனர்.

அந்தவகையில் ஆஸ்திரேலிய அணிக்கு 2015ல் உலக கோப்பையை வென்று கொடுத்தவரும் மிகச்சிறந்த ஆல்ரவுண்டருமான மைக்கேல் கிளார்க், தனது கெரியரில் தான் சேர்ந்தும் எதிர்த்தும் ஆடியதில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் யார் என்று ஸ்கை ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் இவர் தான்; முன்னாள் வீரர் கிளார்க் புகழாரம் !! 2

மைக்கேல் கிளார்க் சிறந்த பேட்ஸ்மேன்களை பட்டியலிட்டதில், முதல் பெயராக அவர் சொன்னது பிரயன் லாராவைத்தான். சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான பிரயன் லாராவை தேர்வு செய்தார்.

அடுத்ததாக சச்சின் டெண்டுல்கரின் பெயரை தெரிவித்த கிளார்க், நான் பார்த்ததிலேயே டெக்னிக்கலாக மிகச்சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தான். சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் டெக்னிக்கில் எந்த குறையுமே கிடையாது. அவுட்டாக்குவதற்கு மிகக்கடினமான பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். அவராக தவறு செய்தால் மட்டுமே அவரை வீழ்த்த முடியும்.

பிரயன் லாரா, சச்சின் டெண்டுல்கர் ஆகிய 2 ஜாம்பவான்களுக்கு அடுத்து மைக்கேல் கிளார்க் தேர்வு செய்தது விராட் கோலியை.. சமகால கிரிக்கெட்டில் மூன்றுவிதமான போட்டிகளிலும் அசத்தலாக ஆடக்கூடிய தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என்று கோலியை புகழ்ந்தார் மைக்கேல் கிளார்க். கோலி தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் இவர் தான்; முன்னாள் வீரர் கிளார்க் புகழாரம் !! 3

மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிட்டு மிஸ்டர் 360 என்று பெயர் பெற்ற ஏபி டிவில்லியர்ஸ், தென்னாப்பிரிக்காவின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டரும் சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் பெஸ்ட் ஆல்ரவுண்டர்களில் முக்கியமானவருமான ஜாக் காலிஸ் ஆகியோரையும் கிளார்க் தேர்வு செய்துள்ளார்.

மைக்கேல் கிளார்க், அவரது கேப்டனும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய பட்டியலில் டாப் 3 இடங்களில் இருப்பவருமான ரிக்கி பாண்டிங்கையும் இலங்கையின் குமார் சங்கக்கராவையும் தேர்வு செய்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *